Vidai pola maraivaaga

விதை போல மறைவாக
Work
Year
Language

விதை போல மறைவாக வாழ்ந்தவன் இன்று தான்
மத யானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்

இமை பொழுதும் உறங்காத காவலன்
இவன் சுமை கண்டு மிரளாத சேவகன்
கொள்கையில் மாறாத கோமகன்
இவன் திசை எங்கும் காத்திடும் திருமகன்

இடி வந்து விழுந்தாலும் இடியாதவன்
இடர் என்ன வந்தாலும் இடறாதவன்
பதறாமல் சிதறாமல் அதிராமல் உதிராமல்
இருக்கின்ற வரம் பெட்ட்றவன்

பகை என்ன வந்தாலும் பதராதவன்
பதவிகள் தடுத்தாலும் பணியாதவன்
ஓர் கோடி எதிர்த்தாலும் மிரலாதவன்
ஒற்றையை பல பேரை வதம் செய்தவன்

எதிரிகள் எவர் என்று என்னதவன்
தோல்வியின் விளும்பிலும் துவலாதவன்
விலை என்ன தந்தாலும் வலையாதவன்
எளிமைக்கு இவன் என்றும் துனையானவன்

மலையாக நின்று மற்போரில் வென்று
அடுத்த தளம் எதுவென்று அஞ்சாமல் தளமாடுவான்

[விதை போல ..]

தனியாக இருந்தாலும் படை தான் இவன்
தரணியை பிளக்கின்ற எடை தான் இவன்
புலன் ஐந்தும் தெளிவாக இருகின்றவன்
புறம் நான்கும் எளிதாக வலைகின்றவன்

உடையாத தடைகளை உடைகின்றவன்
உண்மையாய் சாதனை படைகின்றவன்
எரிமலை கோலம்பாக கொதிகின்றவன்
குறி வைத்து சமரிலே செய்கின்றவன்

மின்னல் என சீறி அமில மழை தூவி
அழுகின்றி தேசத்தை அழகாக துடைகின்றவன்

[விதை போல ..]

vidai pola maṟaivāga vāḻndavaṉ iṇḍru tāṉ
mada yāṉai pol varugiṟāṉ
aḍaiyāḽam tĕriyāda uḍaiyoḍu tirindavaṉ
paḍaiyoḍu naḍai payilgiṟāṉ

imai pŏḻudum uṟaṅgāda kāvalaṉ
ivaṉ sumai kaṇḍu miraḽāda sevagaṉ
kŏḽkaiyil māṟāda komagaṉ
ivaṉ tisai ĕṅgum kāttiḍum tirumagaṉ

iḍi vandu viḻundālum iḍiyādavaṉ
iḍar ĕṉṉa vandālum iḍaṟādavaṉ
padaṟāmal sidaṟāmal adirāmal udirāmal
irukkiṇḍra varam pĕṭṭṟavaṉ

pagai ĕṉṉa vandālum padarādavaṉ
padavigaḽ taḍuttālum paṇiyādavaṉ
or koḍi ĕdirttālum miralādavaṉ
ŏṭraiyai pala perai vadam sĕydavaṉ

ĕdirigaḽ ĕvar ĕṇḍru ĕṉṉadavaṉ
tolviyiṉ viḽumbilum tuvalādavaṉ
vilai ĕṉṉa tandālum valaiyādavaṉ
ĕḽimaikku ivaṉ ĕṇḍrum tuṉaiyāṉavaṉ

malaiyāga niṇḍru maṟporil vĕṇḍru
aḍutta taḽam ĕduvĕṇḍru añjāmal taḽamāḍuvāṉ

[vidai pola ..]

taṉiyāga irundālum paḍai tāṉ ivaṉ
taraṇiyai piḽakkiṇḍra ĕḍai tāṉ ivaṉ
pulaṉ aindum tĕḽivāga irugiṇḍravaṉ
puṟam nāṉkum ĕḽidāga valaigiṇḍravaṉ

uḍaiyāda taḍaigaḽai uḍaigiṇḍravaṉ
uṇmaiyāy sādaṉai paḍaigiṇḍravaṉ
ĕrimalai kolambāga kŏdigiṇḍravaṉ
kuṟi vaittu samarile sĕygiṇḍravaṉ

miṉṉal ĕṉa sīṟi amila maḻai tūvi
aḻugiṇḍri tesattai aḻagāga tuḍaigiṇḍravaṉ

[vidai pola ..]