Varugiraay todugiraay

வருகிறாய் தொடுகிறாய்
Year
Language

வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய்
வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய் ஆனால் பொய் சொல்கிறாய்
போ போ

வர வரத்தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிற காதல் கடங்காரி
அடி உலகில் இவளும் உனைப்போல் இல்லையே அழகிய கொலைகாரி
குளிர் நிலவினை நெருப்பாய் நினைக்கிற வெறுப்பாய் நீ ஒரு அசடனடா
அது உனக்கென உயில்தான் எழுதிய மயில்தான் நீ இதை அனுபவிடா
ஹையோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
ஏண்டி என் கற்போடு மோதுகிறாய்
நானா உனை வாவென்று கூவினேன்
நீயாய் வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்
உயிர் விடச்சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச்சொன்னால் உனை விட மாட்டேன்
இறுதி வரைக்கும் இருப்பவன் என்று உறுதியை தந்து உதருவதென்ன
ஹோ தவித்தது போதும் தனிமையில் இருக்கவிடு என்னை இருக்கவிடு
இருக்கவிடு அன்பே இருக்கவிடு
வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்

விடை கொடுத்தேன் விடு விடு விலகிடு தினம் தினம் எனை ஏன் துரத்துகிறாய்
அடி இதயக்கதவை இழுத்தே அடைத்தேன் எதுக்கதை தட்டுகிறாய்
வங்க கடற்கரை மணலில் மடியினில் கிடந்த நாட்களை மறந்தாச்சா
உயிர் காதலை வளர்க்க பேசிய பேச்சு காத்துல பறந்தாச்சா
ஏதோ ஏதோ நான் ஏதேதோ பேசினேன்
தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன்
இன்று நான் விடுதலை அடைந்தவன்
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்
தழுவிடும் இமையை தனக்கொரு சுமையாய்
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லையே
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனையன்றி இம்மி உறுதுணை இல்லை
காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
மறக்கவிடு உன்னை மறக்கவிடு
மறக்கவிடு அன்பே மறந்துவிடு
மறக்கவிடு
வருகிறாய் தொடுகிறாய் எனை வெந்நீர் போலே சுடுகிறாய்
போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
போ போ என்கிறேன் போகாமல் நீ நிற்கிறாய்
வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன் நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய் ஆனால் பொய் சொல்கிறாய்
போ போ

varugiṟāy tŏḍugiṟāy ĕṉai vĕnnīr pole suḍugiṟāy
varugiṟāy tŏḍugiṟāy ĕṉai vĕnnīr pole suḍugiṟāy
po po ĕṉkiṟeṉ pogāmal nī niṟkiṟāy
po po ĕṉkiṟeṉ pogāmal nī niṟkiṟāy
varugiṟeṉ tŏḍugiṟeṉ nāṉ paṉṉīr pole viḻugiṟeṉ
varugiṟeṉ tŏḍugiṟeṉ nāṉ paṉṉīr pole viḻugiṟeṉ
nī po po ĕṉkiṟāy āṉāl pŏy sŏlgiṟāy
po po

vara varattāṉ aḍikkaḍi nĕrukkaḍi kŏḍukkiṟa kādal kaḍaṅgāri
aḍi ulagil ivaḽum uṉaippol illaiye aḻagiya kŏlaigāri
kuḽir nilaviṉai nĕruppāy niṉaikkiṟa vĕṟuppāy nī ŏru asaḍaṉaḍā
adu uṉakkĕṉa uyildāṉ ĕḻudiya mayildāṉ nī idai aṉubaviḍā
haiyo ammā nī pŏllāda rāṭcasi
eṇḍi ĕṉ kaṟpoḍu modugiṟāy
nāṉā uṉai vāvĕṇḍru kūviṉeṉ
nīyāy vandĕṉṉai eṉ vāṭṭugiṟāy
uyir viḍaccŏṉṉāl uyir viḍugiṇḍreṉ
uṉai viḍaccŏṉṉāl uṉai viḍa māṭṭeṉ
iṟudi varaikkum iruppavaṉ ĕṇḍru uṟudiyai tandu udaruvadĕṉṉa
ho tavittadu podum taṉimaiyil irukkaviḍu ĕṉṉai irukkaviḍu
irukkaviḍu aṉbe irukkaviḍu
varugiṟāy tŏḍugiṟāy ĕṉai vĕnnīr pole suḍugiṟāy
po po ĕṉkiṟeṉ pogāmal nī niṟkiṟāy

viḍai kŏḍutteṉ viḍu viḍu vilagiḍu tiṉam tiṉam ĕṉai eṉ turattugiṟāy
aḍi idayakkadavai iḻutte aḍaitteṉ ĕdukkadai taṭṭugiṟāy
vaṅga kaḍaṟkarai maṇalil maḍiyiṉil kiḍanda nāṭkaḽai maṟandāccā
uyir kādalai vaḽarkka pesiya peccu kāttula paṟandāccā
edo edo nāṉ ededo pesiṉeṉ
tūṇḍil nī poṭṭāy nāṉ māṭṭiṉeṉ
iṇḍru nāṉ viḍudalai aḍaindavaṉ
appāḍā ĕṉ sumaigaḽai iṟakkiṉeṉ
taḻuviḍum imaiyai taṉakkŏru sumaiyāy
niṉaikkiṇḍra viḻidāṉ kadaiyilum illaiye
kaḍalĕṇḍru niṉaittu kalakkiṇḍra nadikku
uṉaiyaṇḍri immi uṟuduṇai illai
kādal sĕydeṉ nāṉ kādal sĕydeṉ
maṟakkaviḍu uṉṉai maṟakkaviḍu
maṟakkaviḍu aṉbe maṟanduviḍu
maṟakkaviḍu