Vaanattai vittu

வானத்தை விட்டு
Year
Language

வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
பாதத்தை விட்டு விட்டு பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவையென்ன
என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துதென்ன
கண்கள் இரண்டை கட்டி விட்டு காண சொல்லும் காட்சியென்ன
கடல் அலைமோத நிகழ்ந்தது கிடையாது
கனவு அலை போல ஓயாது ஹோ…
துணிவுகள் போல விரல் தொடும் நிலமாக
இனிமைகள் வந்து சேரும் நாள் ஏது ஏது
வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன

வானொலியில் பாட்டு வரும் எனது பாடல் எதுவோ
வீதியெல்லாம் பூக்கடைகள் எனது பூவும் எதுவோ
கோவிலிலே தீப விழா எனது தீபம் எதுவோ
பாதம் எல்லாம் கடற்கரையில் எனது தடமும் எதுவோ
தேடி தேடி தேய்ந்து போனேன் தேடல் என்று தீருமோ
காதல் நீரில் ஆசை நீரை தேடி என்ன லாபமோ
வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன

காகிதமாய் நானிருந்தேன் கவிதை எழுதி பழக
நான் எழுதும் வேளையிலே மொழிகள் யாவும் தயங்க
தூரிகையாய் நானிருந்தேன் அழகை நாளும் வரைய
நான் வரையும் வேளையிலே நிறங்கள் ஓடி ஒளிய
வேறு வேறு வேஷம் போட்டேன் காணவில்லை யாருமே
மேலும் மேலும் சோர்ந்து போனேன் மாறவில்லை கோணமே
வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
பாதத்தை விட்டு விட்டு பயணங்கள் நீள்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவையென்ன
என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துதென்ன
கண்கள் இரண்டை கட்டி விட்டு காண சொல்லும் காட்சியென்ன
கடல் அலைமோத நிகழ்ந்தது கிடையாது
கனவு அலை போல ஓயாது ஹோ…
துணிவுகள் போல விரல் தொடும் நிலமாக
இனிமைகள் வந்து சேரும் நாள் ஏது ஏது

vāṉattai viṭṭu viṭṭu megaṅgaḽ povadĕṉṉa
vāsattai viṭṭu viṭṭu pūvĕllām pūttadĕṉṉa
pādattai viṭṭu viṭṭu payaṇaṅgaḽ nīḽvadĕṉṉa
tāgattai viṭṭu viṭṭu taṇṇīriṉ tevaiyĕṉṉa
ĕṉṉai maṭṭum viṭṭu viṭṭu pūmi iṅgu suttudĕṉṉa
kaṇgaḽ iraṇḍai kaṭṭi viṭṭu kāṇa sŏllum kāṭciyĕṉṉa
kaḍal alaimoda nigaḻndadu kiḍaiyādu
kaṉavu alai pola oyādu ho…
tuṇivugaḽ pola viral tŏḍum nilamāga
iṉimaigaḽ vandu serum nāḽ edu edu
vāṉattai viṭṭu viṭṭu megaṅgaḽ povadĕṉṉa
vāsattai viṭṭu viṭṭu pūvĕllām pūttadĕṉṉa

vāṉŏliyil pāṭṭu varum ĕṉadu pāḍal ĕduvo
vīdiyĕllām pūkkaḍaigaḽ ĕṉadu pūvum ĕduvo
kovilile tība viḻā ĕṉadu tībam ĕduvo
pādam ĕllām kaḍaṟkaraiyil ĕṉadu taḍamum ĕduvo
teḍi teḍi teyndu poṉeṉ teḍal ĕṇḍru tīrumo
kādal nīril āsai nīrai teḍi ĕṉṉa lābamo
vāṉattai viṭṭu viṭṭu megaṅgaḽ povadĕṉṉa
vāsattai viṭṭu viṭṭu pūvĕllām pūttadĕṉṉa

kāgidamāy nāṉirundeṉ kavidai ĕḻudi paḻaga
nāṉ ĕḻudum veḽaiyile mŏḻigaḽ yāvum tayaṅga
tūrigaiyāy nāṉirundeṉ aḻagai nāḽum varaiya
nāṉ varaiyum veḽaiyile niṟaṅgaḽ oḍi ŏḽiya
veṟu veṟu veṣam poṭṭeṉ kāṇavillai yārume
melum melum sorndu poṉeṉ māṟavillai koṇame