Tolu tolu taan

டோலு டோலு தான்
Work
Year
Language

டோலு டோலு தான் அடிக்கிறான்
இரு தோலுந் தோலுந்தான் ஒரசுறான்
மேலும் கீழுமாய் இழுக்குறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் நிறைவதும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

அய்ல அய்ல அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்ல ஒய்ல நீ சில்மிஷ ப்பேரா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா
சுட சுட மழையை குளு குளு வெயிலை
முதல் முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை கரு நிற பகலை
முதல் முறை பார்த்தேனே

இடிகளை உரசி புயல்களை அலசி
நடந்தவன் நான் தானே
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க
முதல் முறை பயந்தேனே

நீ ஞனன நமன நான் யரல வரல
நீ உடைந்து உருக நான் உணர்ந்து பருக
வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி
இடப்பக்கம் சுழலுது உன்னாலே
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்
விரிந்தது குடை போலே
இருபது வருஷம் பறவையைப் போலே

சுற்றிச் சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே வளைய
முழுவதும் தொலைந்தேனே

நீ எனக்குள் நுழைய நான் உனக்குள் வளைய
நாம் நமக்குள் கரைய நம் உலகம் குறைய 

ṭolu ṭolu tāṉ aḍikkiṟāṉ
iru tolun dolundāṉ ŏrasuṟāṉ
melum kīḻumāy iḻukkuṟāṉ
muppālum kalandu ĕṉṉa kalakkuṟāṉ
puli māṉai veṭṭaidāṉ āḍiḍume kāṭṭil
māṉ puliyai veṭṭaidāṉ āḍumiḍam kaṭṭil
muṉṉum piṉṉum tāṉ muḻumaiyā
nāṉ sŏrkka naragattiṉ kalavaiyā
pĕṇ iḍaiyum niṟaivadum ŏṇḍru tāṉ
rĕṇḍum irundum tĕrivade illai.

ayla ayla aḍi āriyamālā
aganda viḻigaḽ ĕṉṉa kūriyavelā
ŏyla ŏyla nī silmiṣa pperā
sirikki sirippu ĕṉṉa mandirakkolā
suḍa suḍa maḻaiyai kuḽu kuḽu vĕyilai
mudal muṟai ulagattil kaṇḍeṉe
vĕḽḽai niṟa iravai karu niṟa pagalai
mudal muṟai pārtteṉe

iḍigaḽai urasi puyalgaḽai alasi
naḍandavaṉ nāṉ tāṉe
idu ĕṉṉa māyam malar ŏṇḍrai paṟikka
mudal muṟai payandeṉe

nī ñaṉaṉa namaṉa nāṉ yarala varala
nī uḍaindu uruga nāṉ uṇarndu paruga
valappakkam suḻalum pūmippandu tirumbi
iḍappakkam suḻaludu uṉṉāle
kaippiḍi aḽavu irukkiṇḍra idayam
virindadu kuḍai pole
irubadu varuṣam paṟavaiyaip pole

suṭric cuṭri tirindeṉe
iraṇḍŏru nŏḍiyil uṉakkuḽḽe vaḽaiya
muḻuvadum tŏlaindeṉe

nī ĕṉakkuḽ nuḻaiya nāṉ uṉakkuḽ vaḽaiya
nām namakkuḽ karaiya nam ulagam kuṟaiya