Terindo teriyaamalo

தெரிந்தோ தெரியாமலோ
Year
Language

தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
சொல்லாமல் அள்ளிக்கொண்டு விளையாடும் கண்ணுக்குள்ளே
திருடாமல் திருடிக்கொண்டு தடுமாறும் நெஞ்சுக்குள்ளே
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது ந ந ந ந
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது

மழை வரும் போல் காற்று வந்து மனசுக்குள்ளே வீசுது
குடை பிடித்து காதல் வந்து ரகசியமாய் பேசுது
நெஞ்சோரத்தில் பூக்களின் தாழ்வாரம்
யார் யாரோடு சொல்லுமோ பூவாசம்
சிறுநகையில் சின்னஞ்சிறு இடம் கேட்டு
வளர்கிறது முத்தங்களின் விதைகள்
மழை வருது மழைக்கேத்த வெயில் வருது புயலும் வருது
இலை விழுது இலைகளோடு சிலை ஒன்று மிதந்து வருது
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது ந ந ந ந
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது

இதயத்திலே மாய வலையை விரித்தது யார் விழியிலே
வலை இதிலே மாட்டிக்கொண்டு தவிப்பது யார் உயிரிலே
ஏகாந்தத்தில் நீந்திடும் பூ நெஞ்சம்
மேகங்களாய் போய்வரும் ஊர்கோலம்
 கொழுந்துவிடும் நெருப்பினில் குளிர் காய்ந்து
கனவுகளில் சிவக்குது இரவு
பிழை கூட மறந்து போச்சு
புதுசாக மாறி போச்சு
அழகான பொய்கள் எல்லாம் எழுதாத கவிதை ஆச்சு
ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது ந ந ந ந
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது
தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது ஏனோ இனிக்குது

tĕrindo tĕriyāmalo edo naḍakkudu eṉo iṉikkudu
tĕrindo tĕriyāmalo edo naḍakkudu eṉo iṉikkudu
sŏllāmal aḽḽikkŏṇḍu viḽaiyāḍum kaṇṇukkuḽḽe
tiruḍāmal tiruḍikkŏṇḍu taḍumāṟum nĕñjukkuḽḽe
edo naḍakkudu eṉo iṉikkudu na na na na
tĕrindo tĕriyāmalo edo naḍakkudu eṉo iṉikkudu

maḻai varum pol kāṭru vandu maṉasukkuḽḽe vīsudu
kuḍai piḍittu kādal vandu ragasiyamāy pesudu
nĕñjorattil pūkkaḽiṉ tāḻvāram
yār yāroḍu sŏllumo pūvāsam
siṟunagaiyil siṉṉañjiṟu iḍam keṭṭu
vaḽargiṟadu muttaṅgaḽiṉ vidaigaḽ
maḻai varudu maḻaikketta vĕyil varudu puyalum varudu
ilai viḻudu ilaigaḽoḍu silai ŏṇḍru midandu varudu
edo naḍakkudu eṉo iṉikkudu na na na na
tĕrindo tĕriyāmalo edo naḍakkudu eṉo iṉikkudu
tĕrindo tĕriyāmalo edo naḍakkudu eṉo iṉikkudu

idayattile māya valaiyai virittadu yār viḻiyile
valai idile māṭṭikkŏṇḍu tavippadu yār uyirile
egāndattil nīndiḍum pū nĕñjam
megaṅgaḽāy poyvarum ūrgolam
 kŏḻunduviḍum nĕruppiṉil kuḽir kāyndu
kaṉavugaḽil sivakkudu iravu
piḻai kūḍa maṟandu poccu
pudusāga māṟi poccu
aḻagāṉa pŏygaḽ ĕllām ĕḻudāda kavidai āccu
edo naḍakkudu eṉo iṉikkudu na na na na
tĕrindo tĕriyāmalo edo naḍakkudu eṉo iṉikkudu
tĕrindo tĕriyāmalo edo naḍakkudu eṉo iṉikkudu