ஆண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
பெண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
ஆண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
பெண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
ஆண் : தானா வந்த சந்தனமே
பெண் : உன்ன தழுவ தினம் சம்மதமே
***
ஆண் : வண்ண வண்ண வளவி போட்டு வசமாக வளைச்சிப் போட்டு
என்னைக் கட்டி இழுத்து போகும் இளந்தேகமே
பெண் : கூறைபட்டு கலங்கிடாமே குறை ஏதும் நடந்திடாம
ஆசைப்பட்டு அணைக்கவேணும் மகராசனே
ஆண் : முன்ன பின்ன அறிஞ்சதில்ல முறையாக தெரிஞ்சதில்ல
சின்ன சின்ன தவற நீயும் பொறுத்தாக வேணுமே
பெண் : புத்தகத்தில் படிக்கவில்ல புரியாம நடிக்கவில்ல
வித்தைகள வெவரமாக வெளியாக்க வேணுமே
ஆண் : இந்த மேனி இன்பத் தோணி
பெண் : ராணி இந்த ராணி இந்த ராஜனோட விருப்பமே
ஆண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
பெண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
ஆண் : யாராலும் படிக்காத மங்கள ராகமே
பெண் : தானா வந்த சந்தனமே
ஆண் : உன்ன தழுவ தினம் சம்மதமே
***
பெண் : முத்துநவ ரத்தினத்தோட முழுசான லட்சணத்தோட
மெத்தையில நானும் கூட வர வேணுமே
ஆண் : முன்னம் ரெண்டு பவளத்தோட
முன்வாயில் மதுரத்தோட
கண்ணனுக்கு காதல் விருந்து தர வேணுமே
பெண் : தொட்டுத் தொட்டு சுகமும் கூட சுதியோடு கலந்து பாடுமே
விட்டு விட்டு விலகி ஓட முடியாம போகுமே
ஆண் : கொத்துமல்லி கொண்டையிலாட குளிர் பார்வை வண்டுகளாட
புத்தம் புது செண்டுகளாட புது தாகம் தோணுமே
பெண் : நல்ல ராசா சொல்லு லேசா
ஆண் : ராசா இந்த ராசா இந்த ராணியோட பொருத்தமே
பெண் : தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தினம் சம்மதமே
ஆண் : இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
பெண் : யாராலும் படிக்காத மங்கள ராகமே
ஆண் : தானா வந்த சந்தனமே
பெண் : உன்ன தழுவ தினம் சம்மதமே
āṇ : tāṉā vanda sandaṉame uṉṉa taḻuva tiṉam sammadame
pĕṇ : tāṉā vanda sandaṉame uṉṉa taḻuva tiṉam sammadame
āṇ : idu veṟārum paṟikkāda malliga toṭṭame
yārālum paḍikkāda maṅgaḽa rāgame
pĕṇ : idu veṟārum paṟikkāda malliga toṭṭame
yārālum paḍikkāda maṅgaḽa rāgame
āṇ : tāṉā vanda sandaṉame
pĕṇ : uṉṉa taḻuva tiṉam sammadame
***
āṇ : vaṇṇa vaṇṇa vaḽavi poṭṭu vasamāga vaḽaiccip poṭṭu
ĕṉṉaik kaṭṭi iḻuttu pogum iḽandegame
pĕṇ : kūṟaibaṭṭu kalaṅgiḍāme kuṟai edum naḍandiḍāma
āsaippaṭṭu aṇaikkaveṇum magarāsaṉe
āṇ : muṉṉa piṉṉa aṟiñjadilla muṟaiyāga tĕriñjadilla
siṉṉa siṉṉa tavaṟa nīyum pŏṟuttāga veṇume
pĕṇ : puttagattil paḍikkavilla puriyāma naḍikkavilla
vittaigaḽa vĕvaramāga vĕḽiyākka veṇume
āṇ : inda meṉi iṉbat toṇi
pĕṇ : rāṇi inda rāṇi inda rājaṉoḍa viruppame
āṇ : tāṉā vanda sandaṉame uṉṉa taḻuva tiṉam sammadame
pĕṇ : idu veṟārum paṟikkāda malliga toṭṭame
āṇ : yārālum paḍikkāda maṅgaḽa rāgame
pĕṇ : tāṉā vanda sandaṉame
āṇ : uṉṉa taḻuva tiṉam sammadame
***
pĕṇ : muttunava rattiṉattoḍa muḻusāṉa laṭcaṇattoḍa
mĕttaiyila nāṉum kūḍa vara veṇume
āṇ : muṉṉam rĕṇḍu pavaḽattoḍa
muṉvāyil madurattoḍa
kaṇṇaṉukku kādal virundu tara veṇume
pĕṇ : tŏṭṭut tŏṭṭu sugamum kūḍa sudiyoḍu kalandu pāḍume
viṭṭu viṭṭu vilagi oḍa muḍiyāma pogume
āṇ : kŏttumalli kŏṇḍaiyilāḍa kuḽir pārvai vaṇḍugaḽāḍa
puttam pudu sĕṇḍugaḽāḍa pudu tāgam toṇume
pĕṇ : nalla rāsā sŏllu lesā
āṇ : rāsā inda rāsā inda rāṇiyoḍa pŏruttame
pĕṇ : tāṉā vanda sandaṉame uṉṉa taḻuva tiṉam sammadame
āṇ : idu veṟārum paṟikkāda malliga toṭṭame
pĕṇ : yārālum paḍikkāda maṅgaḽa rāgame
āṇ : tāṉā vanda sandaṉame
pĕṇ : uṉṉa taḻuva tiṉam sammadame