Sorkkattin vaasarpadi

சொர்க்கத்தின் வாசற்படி
Year
Language

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித்துளியே

பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

ஆண் : உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள்
ஒன்றிரண்டு அல்லவே

பெண் : ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள்
என்றும் இரண்டல்லவே

ஆண் : சிற்றன்னவாசலின் ஓவியமே
சிந்தைக்குள் ஊறிய காவியமே

பெண் : எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்

ஆண் : மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பெண் : உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்

ஆண் : கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்

பெண் : மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய்
மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்

ஆண் : கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ

பெண் : கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன் நீயென்னை ஆளுகிறாய்

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பெண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

ஆண் : பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே

பெண் : சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே

ஆண் : சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பெண் : சொர்க்கத்தின் வாசற்படி

āṇ : sŏrkkattiṉ vāsaṟpaḍi ĕṇṇak kaṉavugaḽil
sŏrkkattiṉ vāsaṟpaḍi ĕṇṇak kaṉavugaḽil
pĕṇṇalla nīyĕṉakku vaṇṇak kaḽañjiyame
siṉṉamalark kŏḍiye nĕñjil sindum paṉittuḽiye

pĕṇ : sŏrkkattiṉ vāsaṟpaḍi ĕṇṇak kaṉavugaḽil
sŏrkkattiṉ vāsaṟpaḍi ĕṇṇak kaṉavugaḽil

āṇ : uṉṉāle uṇḍāgum ñābagaṅgaḽ
ŏṇḍriraṇḍu allave

pĕṇ : ŏṇḍrukkuḽ ŏṇḍrāṉa nīralaigaḽ
ĕṇḍrum iraṇḍallave

āṇ : siṭraṉṉavāsaliṉ oviyame
sindaikkuḽ ūṟiya kāviyame

pĕṇ : ĕṅge nī aṅgedāṉ nāṉiruppeṉ
ĕppodum nīyāḍat toḽ kŏḍuppeṉ

āṇ : mogattil nāṉ paḍikkum māṇikka vāsagame
nāṉ sŏllum pāḍalĕllām nī tanda yāsagame

pĕṇ : sŏrkkattiṉ vāsaṟpaḍi ĕṇṇak kaṉavugaḽil
sŏrkkattiṉ vāsaṟpaḍi ĕṇṇak kaṉavugaḽil
pĕṇṇalla nāṉ uṉakku vaṇṇak kaḽañjiyame
sindum paṉittuḽiye ĕṉṉaic cerum iḽaṅgiḽiye

āṇ : sŏrkkattiṉ vāsaṟpaḍi ĕṇṇak kaṉavugaḽil

pĕṇ : uṉṉāle nāṉ kŏṇḍa kāyaṅgaḽai muṉṉum piṉṉum aṟiveṉ

āṇ : kaṇṇāle nī sĕyyum māyaṅgaḽai iṇḍrum ĕṇḍrum aṟiveṉ

pĕṇ : miṉcāram polĕṉait tākkugiṟāy
mañjattaip porkkaḽam ākkugiṟāy

āṇ : kaṇṇe uṉ kaṇṇĕṉṉa veliṉamo
kai tŏṭṭāl mĕy tŏṭṭāl mīṭṭiḍumo

pĕṇ : koṭṭaikkuḽ nī pugundu veṭṭaigaḽ āḍugiṟāy
nāṉiṅgu toṭruviṭṭeṉ nīyĕṉṉai āḽugiṟāy

āṇ : sŏrkkattiṉ vāsaṟpaḍi ĕṇṇak kaṉavugaḽil

pĕṇ : sŏrkkattiṉ vāsaṟpaḍi ĕṇṇak kaṉavugaḽil

āṇ : pĕṇṇalla nīyĕṉakku vaṇṇak kaḽañjiyame

pĕṇ : sindum paṉittuḽiye ĕṉṉaic cerum iḽaṅgiḽiye

āṇ : sŏrkkattiṉ vāsaṟpaḍi ĕṇṇak kaṉavugaḽil

pĕṇ : sŏrkkattiṉ vāsaṟpaḍi