Sivaa sivaaya potriye

சிவா சிவாய போற்றியே
Work
Year
Language

சிவா சிவாய போற்றியே! 
நமச்சிவாய போற்றியே!
பிறப்பறுக்கும் ஏகனே! 
பொறுத்தருள் அநேகனே!

பரம்பொருள் உன் நாமத்தை
கரங்குவித்துப் பாடினோம்!
இறப்பிலி உன் கால்களை
சிரங்குவித்து தேடினோம்!

யாரு இவன்? யாரு இவன்?
கல்லத் தூக்கிப் போறானே!
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே!

கண்ணு ரெண்டு போதல!
கையு காலு ஓடல!
கங்கையத்தான் தேடிகிட்டு 
தன்னத் தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே!

எல்லையில்லாத ஆதியே
எல்லாமுணர்ந்த சோதியே
மலைமகள் உன் பாதியே
அலைமகள் உன் கைதியே

அருள்வல்லான் எம் அற்புதன்
அரும்பொருள் எம் அர்ச்சிதன்
உமை விரும்பும் உத்தமன்
உருவிலா எம் உருத்திரன்

ஒளிர்விடும் எம் தேசனே
குளிர்மலை தன் வாசனே
எழில்மிகு எம் நேசனே
அழித்தொழிக்கும் ஈசனே

நில்லாமல் ஆடும் அந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிர்க்கும் பந்தமே!

sivā sivāya poṭriye! 
namaccivāya poṭriye!
piṟappaṟukkum egaṉe! 
pŏṟuttaruḽ anegaṉe!

parambŏruḽ uṉ nāmattai
karaṅguvittup pāḍiṉom!
iṟappili uṉ kālgaḽai
siraṅguvittu teḍiṉom!

yāru ivaṉ? yāru ivaṉ?
kallat tūkkip poṟāṉe!
puḽḽa pola toḽu mela
uṉṉat tūkkip poṟāṉe!

kaṇṇu rĕṇḍu podala!
kaiyu kālu oḍala!
kaṅgaiyattāṉ teḍigiṭṭu 
taṉṉat tāṉe sumandugiṭṭu
liṅgam naḍandu pogude!

ĕllaiyillāda ādiye
ĕllāmuṇarnda sodiye
malaimagaḽ uṉ pādiye
alaimagaḽ uṉ kaidiye

aruḽvallāṉ ĕm aṟpudaṉ
arumbŏruḽ ĕm arscidaṉ
umai virumbum uttamaṉ
uruvilā ĕm uruttiraṉ

ŏḽirviḍum ĕm tesaṉe
kuḽirmalai taṉ vāsaṉe
ĕḻilmigu ĕm nesaṉe
aḻittŏḻikkum īsaṉe

nillāmal āḍum andame
kallāgi niṟkum undame
kallā ĕṅgaṭku sŏndame
ĕllā uyirkkum pandame!