Siru paarvaiyaale

சிறு பார்வையாலே
Work
Year
Language

குழு: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

(இசை...)

ஆண்: சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே....
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே...
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே...
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே...
நீ தூரப் பச்சை... என் நெடுநாள் இச்சை....
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத் தீவே...

பெண்: தந்தி ஆக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப் பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உனை தொட்டுப் பார்த்து முத்தம் இடவா

ஆண்: சிறு பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே...
தலை சாய்த்துக் கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே...

குழு: விழியே.. ஆ கைபா கைபா..
மடியே.. ஆ கைபா கைபா..
விழியே.. ஆ கைபா கைபா..
மடியே.. ஆ கைபா கைபா..

ஆண்: உதய்க்கும் மலைகளிலே..
மிதக்கும் படையெனவே..
மறைக்கும் முகிலிடையே..
சிரிக்கும் முழு நிலவே..

பெண்: அடக்கம் தடுக்கிறதே..
அதட்டிப் பிடிக்கிறதே..
நெருங்கி வருகையிலே..
நொறுங்கி உடைகிறதே..
ஆண்: உன் நெஞ்சில் இட்டு என்னைத் தாலாட்ட..
என் கர்வம் எட்டிப் பார்க்கும் வாலாட்ட..
நீ மண்ணில் உள்ள பெண்ணே இல்லை
என்னைத் தேடி வந்தாய் பாராட்ட.... (சிறு பார்வையாலே...)

(இசை...)

ஆண்: சிலிர்க்கும் செடிகளிலே..
துளிர்க்கும் முதல் இலையே..
இனிக்கும் கரும்பினிலே..
கிடைக்கும் முதல் சுவையே..

பெண்: விழுந்தேன் இரவினிலே..
எழுந்தேன் கனவினிலே..
கனவில் நீ வந்தாய்..
மறந்தேன் வெளிவரவே...

ஆண்: ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே...
அதை கால்கள் என்று பொய்கள் சொன்னாயே...

பெண்: நீ கொஞ்சும் போது பாழும் நஞ்சு...
ஆனால்கூட அள்ளி உண்பேனே....

ஆண்: ஆ ஆ ஆ ஆ அடி பார்வையாலே கொய்தாய் என்னை
விழியே விழியே..
தலை சாய்த்து கொள்ள வேண்டும்
உந்தன் மடியே மடியே..
நீ தூரப் பச்சை.. என் நெடுநாள் இச்சை..
ஒரு மாறு வேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைப் தீவே...

பெண்: தந்தி ஆக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டு பார்த்து முத்தம் இடவா....

kuḻu: mmmmmmmm....
mmmmmmmm.....

(isai...)

āṇ: siṟu pārvaiyāle kŏydāy ĕṉṉai
viḻiye viḻiye....
talai sāyttuk kŏḽḽa veṇḍum
undaṉ maḍiye maḍiye...
siṟu pārvaiyāle kŏydāy ĕṉṉai
viḻiye viḻiye...
talai sāyttuk kŏḽḽa veṇḍum
undaṉ maḍiye maḍiye...
nī tūrap paccai... ĕṉ nĕḍunāḽ iccai....
ŏru māṟu veḍam pūṇḍu vanda mallippūve mullait tīve...

pĕṇ: tandi āga māṟi undaṉ vīḍu varavā
tūṅgum uṉṉai tŏṭṭup pārttu muttam iḍavā
tūṅgum uṉai tŏṭṭup pārttu muttam iḍavā

āṇ: siṟu pārvaiyāle kŏydāy ĕṉṉai
viḻiye viḻiye...
talai sāyttuk kŏḽḽa veṇḍum
undaṉ maḍiye maḍiye...

kuḻu: viḻiye.. ā kaibā kaibā..
maḍiye.. ā kaibā kaibā..
viḻiye.. ā kaibā kaibā..
maḍiye.. ā kaibā kaibā..

āṇ: udaykkum malaigaḽile..
midakkum paḍaiyĕṉave..
maṟaikkum mugiliḍaiye..
sirikkum muḻu nilave..

pĕṇ: aḍakkam taḍukkiṟade..
adaṭṭip piḍikkiṟade..
nĕruṅgi varugaiyile..
nŏṟuṅgi uḍaigiṟade..
āṇ: uṉ nĕñjil iṭṭu ĕṉṉait tālāṭṭa..
ĕṉ karvam ĕṭṭip pārkkum vālāṭṭa..
nī maṇṇil uḽḽa pĕṇṇe illai
ĕṉṉait teḍi vandāy pārāṭṭa.... (siṟu pārvaiyāle...)

(isai...)

āṇ: silirkkum sĕḍigaḽile..
tuḽirkkum mudal ilaiye..
iṉikkum karumbiṉile..
kiḍaikkum mudal suvaiye..

pĕṇ: viḻundeṉ iraviṉile..
ĕḻundeṉ kaṉaviṉile..
kaṉavil nī vandāy..
maṟandeṉ vĕḽivarave...

āṇ: ŏru joḍi tĕṇḍral pogudu muṉṉāle...
adai kālgaḽ ĕṇḍru pŏygaḽ sŏṉṉāye...

pĕṇ: nī kŏñjum podu pāḻum nañju...
āṉālgūḍa aḽḽi uṇbeṉe....

āṇ: ā ā ā ā aḍi pārvaiyāle kŏydāy ĕṉṉai
viḻiye viḻiye..
talai sāyttu kŏḽḽa veṇḍum
undaṉ maḍiye maḍiye..
nī tūrap paccai.. ĕṉ nĕḍunāḽ iccai..
ŏru māṟu veḍam pūṇḍu vanda mallippūve mullaip tīve...

pĕṇ: tandi āga māṟi undaṉ vīḍu varavā
tūṅgum uṉṉai tŏṭṭu pārttu muttam iḍavā
tūṅgum uṉṉai tŏṭṭu pārttu muttam iḍavā....