Sinna sinna sugangal

சின்ன சின்ன சுகங்கள்
Work
Year
Language

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

புயல் வந்து மையம் கொண்டால்
பூவில் இதழில் புன்னகை இருக்கு

உள்ளம் பார்க்கும் பார்வை தானே
இன்பம் என்பது

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

எந்த பூவிலும் தேன் துளி உண்டு
எடுத்து குடிக்கும் அறிவுள்ள வண்டு

வாடி கிடக்க வருந்தி துடிக்க
வண்டுக்கு நேரமில்லையே

இருட்டை பார்த்து மலைப்பது மடமை
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை

ஆதவன் செய்யும் வேலை
தன்னை அகலும் செய்து விடும் மண்ணில்

எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி
அழுவது கிடையாது

உன் நெஞ்சிலே சாந்தி கொள்
உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது
வாழும் ஆளை சார்ந்தது
வாழ்க்கை என்பது

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

பூத்து சிரிக்கும் பூக்களிலோடு
பனியின் துளியாய் பல்லாங்குழி ஆடு

வானம் பொழியும் மழையின் ஷவரில்
நாளும் நீராடு

உன்னை கடந்து போகிற போது
ஊட்டி மேகம் திருடி கொண்டோடு

பூவை உடைக்கும் காற்றை போல
புகுந்து விளையாடு

இந்த ஜீவிதம் ஆனந்தம்
கவலைகள் என்று ஒன்று கிடையாது

வெண்ணிலா தேயலாம் வெளிச்சத்தை
வெட்டி கொல்ல முடியாது
மனித ராசி ஒன்று தான் சிரிக்க தெரிந்தது

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு

கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

புயல் வந்து மையம் கொண்டால்
பூவில் இதழில் புன்னகை இருக்கு

உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது

siṉṉa siṉṉa sugaṅgaḽ vāḻkkaiyile
aṅgum iṅgum kŏṭṭi kiḍakku

kaṇṇiraṇḍum sĕviyum tiṟandu vaittāl
suṭri suṭri iṉbam irukku

puyal vandu maiyam kŏṇḍāl
pūvil idaḻil puṉṉagai irukku

uḽḽam pārkkum pārvai tāṉe
iṉbam ĕṉbadu

siṉṉa siṉṉa sugaṅgaḽ vāḻkkaiyile
aṅgum iṅgum kŏṭṭi kiḍakku

kaṇṇiraṇḍum sĕviyum tiṟandu vaittāl
suṭri suṭri iṉbam irukku

ĕnda pūvilum teṉ tuḽi uṇḍu
ĕḍuttu kuḍikkum aṟivuḽḽa vaṇḍu

vāḍi kiḍakka varundi tuḍikka
vaṇḍukku neramillaiye

iruṭṭai pārttu malaippadu maḍamai
iruṭṭai nĕruppāl ĕrippadu tiṟamai

ādavaṉ sĕyyum velai
taṉṉai agalum sĕydu viḍum maṇṇil

ĕṭṭu nāḽ maṭṭum vāḻndiḍum paṭṭāmbūcci
aḻuvadu kiḍaiyādu

uṉ nĕñjile sāndi kŏḽ
uṉ niḻalaiyum tuṉbam vandu nĕruṅgādu
vāḻum āḽai sārndadu
vāḻkkai ĕṉbadu

siṉṉa siṉṉa sugaṅgaḽ vāḻkkaiyile
aṅgum iṅgum kŏṭṭi kiḍakku

kaṇṇiraṇḍum sĕviyum tiṟandu vaittāl
suṭri suṭri iṉbam irukku

pūttu sirikkum pūkkaḽiloḍu
paṉiyiṉ tuḽiyāy pallāṅguḻi āḍu

vāṉam pŏḻiyum maḻaiyiṉ ṣavaril
nāḽum nīrāḍu

uṉṉai kaḍandu pogiṟa podu
ūṭṭi megam tiruḍi kŏṇḍoḍu

pūvai uḍaikkum kāṭrai pola
pugundu viḽaiyāḍu

inda jīvidam āṉandam
kavalaigaḽ ĕṇḍru ŏṇḍru kiḍaiyādu

vĕṇṇilā teyalām vĕḽiccattai
vĕṭṭi kŏlla muḍiyādu
maṉida rāsi ŏṇḍru tāṉ sirikka tĕrindadu

siṉṉa siṉṉa sugaṅgaḽ vāḻkkaiyile
aṅgum iṅgum kŏṭṭi kiḍakku

kaṇṇiraṇḍum sĕviyum tiṟandu vaittāl
suṭri suṭri iṉbam irukku

puyal vandu maiyam kŏṇḍāl
pūvil idaḻil puṉṉagai irukku

uḽḽam pārkkum pārvai tāṉe iṉbam ĕṉbadu