Pooppookkum osai

பூப்பூக்கும் ஓசை
Year
Language

பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி
நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே
பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலியெல்லம் அட சரிகமபதனிசரி

(பூப்பூக்கும் ஓசை)

கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை (2)
சந்தோஷ சங்கீதம்
தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்

ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே கொரே கொரே பைய்யா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)

சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி
சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம்
கரைகொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து
கைதட்டும் ஓசை சங்கீதம்
காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை (2)
சிருங்கார சங்கீதம்
முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும்
தவளைக்கள் ஓசை சங்கீதம்

ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே ஜோரி ஜோரி பைய்யா
ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா

(பூப்பூக்கும் ஓசை)

pūppūkkum osai adaik keṭkattāṉ āsai
pulviriyum osai adaik keṭkattāṉ āsai
paṭcigaḽiṉ kūkkūkkū pūccigaḽiṉ riṅ riṅ riṅ
saṅgīdam sŏllittarume taṅgappĕṇṇe
kāloḍu salaṅgai pūṭṭi karaiyĕllām vīṇai mīṭṭi
nadibāḍum pāḍal keḽāy paṭṭuppĕṇṇe
pūmi ŏru vīṇai adaik kāṭriṉ kaigaḽ mīṭṭude
keṭkum ŏliyĕllam aḍa sarigamabadaṉisari

(pūppūkkum osai)

kaṇdūṅgum nerattil mauḽaṉattiṉ jāmattil
kaḍigārac cattam saṅgīdam
kaṇgāṇā tūrattil sudiserum tāḽattil
rayil pogum osai saṅgīdam
pasigŏṇḍa neram tāḽikkum osai (2)
sandoṣa saṅgīdam
tālāṭṭum aṉṉaikkĕllām taṅgaḽ piḽḽai mārbai muṭṭi
pāluṇṇum sattam saṅgīdam

hilgore hilgore hilgore hilgore maṅgalāre paṅgalāre kŏre kŏre paiyyā
hilgore hilgore hilgore hilgore jaṅgalāre jaṅgalāre tūmīrāde taiyyā

(pūppūkkum osai)

siṭciṭṭuk kuruvigaḽum sillĕṇḍru nīrāḍi
siṟagularttum osai saṅgīdam
karaigŏṇḍa pāṟaimel kaḍal pŏṅga alaivandu
kaidaṭṭum osai saṅgīdam
kāṭroḍu tĕṉṉai asaigiṇḍra osai (2)
siruṅgāra saṅgīdam
muttāḍum nīriṉ mele tattit tattit tāvic cĕllum
tavaḽaikkaḽ osai saṅgīdam

hilgore hilgore hilgore hilgore maṅgalāre paṅgalāre jori jori paiyyā
hilgore hilgore hilgore hilgore jaṅgalāre jaṅgalāre tūmīrāde taiyyā

(pūppūkkum osai)