Pattup poove

பட்டுப் பூவே
Work
Year
Language

பெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே

ஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே...

***

ஆண் : கைகளில் உன்னைத் தொடாமல்
கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல்
தாகம் நீங்குமா

பெண் : காதலர் கைகள் படாமல்
காதல் ஏதய்யா
சித்திரப் பூவை உன்னோடு
சேர்த்துக் கொள்ளய்யா

ஆண் : இதழ்களின் மேலே இதழ்களினாலே
கலைகளைத் தீட்டு சுபகொடி ஏற்று

பெண் : மன்னவனே என் மன்மதனே
என்னைத் தொட்டு தொட்டு தழுவு

ஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு

பெண் : கட்டி கலந்தாடி கவி பாட வா

ஆண் : பட்டுப் பூவே...

***

பெண் : மன்மத பாணம் இப்போது
பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது
நீங்கும் காலமே

ஆண் : விண்ணுக்கு மேலே இல்லாத
சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே
இன்ப வேளையே

பெண் : மது மொழிக் கேட்டு
மயங்குது நெஞ்சம்
மலர் மழைத் தூவி
அணைக்குது மஞ்சம்

ஆண் : சின்னக் கிளி என் செல்லக் கிளி
என்னைத் தொட்டு தொட்டு தழுவ

பெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா

ஆண் : மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே

பெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு

ஆண் : கட்டி கலந்தாடி கவி பாட வா

ஆ & பெ : பட்டுப் பூவே...

pĕṇ : paṭṭup pūve mĕṭṭup pāḍu
kaṭṭi kalandāḍi kavi pāḍa vā
paṭṭup pūve mĕṭṭup pāḍu
kaṭṭi kalandāḍi kavi pāḍa vā
mīṇḍum mīṇḍum veṇḍum
aṇait tāṇḍi pārkkat tūṇḍum
aṉbut teṉe uṉṉaittāṉe
sŏndam nāṉe sŏndam nāṉe

āṇ : paṭṭup pūve mĕṭṭup pāḍu
kaṭṭi kalandāḍi kavi pāḍa vā
paṭṭup pūve...

***

āṇ : kaigaḽil uṉṉait tŏḍāmal
kaṇgaḽ tūṅgumā
sandaṉat teṉait tarāmal
tāgam nīṅgumā

pĕṇ : kādalar kaigaḽ paḍāmal
kādal edayyā
sittirap pūvai uṉṉoḍu
serttuk kŏḽḽayyā

āṇ : idaḻgaḽiṉ mele idaḻgaḽiṉāle
kalaigaḽait tīṭṭu subagŏḍi eṭru

pĕṇ : maṉṉavaṉe ĕṉ maṉmadaṉe
ĕṉṉait tŏṭṭu tŏṭṭu taḻuvu

āṇ : paṭṭup pūve mĕṭṭup pāḍu

pĕṇ : kaṭṭi kalandāḍi kavi pāḍa vā

āṇ : paṭṭup pūve...

***

pĕṇ : maṉmada pāṇam ippodu
pāyum nerame
nĕñjiṉil nāṇam ippodu
nīṅgum kālame

āṇ : viṇṇukku mele illāda
sŏrkkam taṉṉaiye
maṇṇukkuḽ iṅge kaṇḍeṉe
iṉba veḽaiye

pĕṇ : madu mŏḻik keṭṭu
mayaṅgudu nĕñjam
malar maḻait tūvi
aṇaikkudu mañjam

āṇ : siṉṉak kiḽi ĕṉ sĕllak kiḽi
ĕṉṉait tŏṭṭu tŏṭṭu taḻuva

pĕṇ : paṭṭup pūve mĕṭṭup pāḍu
kaṭṭi kalandāḍi kavi pāḍa vā
paṭṭup pūve mĕṭṭup pāḍu
kaṭṭi kalandāḍi kavi pāḍa vā

āṇ : mīṇḍum mīṇḍum veṇḍum
aṇait tāṇḍi pārkkat tūṇḍum
aṉbut teṉe uṉṉaittāṉe
sŏndam nāṉe sŏndam nāṉe

pĕṇ : paṭṭup pūve mĕṭṭup pāḍu

āṇ : kaṭṭi kalandāḍi kavi pāḍa vā

ā & pĕ : paṭṭup pūve...