Palle lakkaa

பல்லே லக்கா
Work
Year
Language

பெண்குழு: சூரியனோ.... சந்திரனோ....... யாரிவனோ...
சட்டுன்னு சொல்லு......
சேரப்பாண்டி சூரனும் இவனோ........
சொல்லு சொல்லு........ சட்டென சொல்லு......
சூரியனோ.... சந்திரனோ....... யாரிவனோ...
சட்டுன்னு சொல்லு......
சேரப்பாண்டி சூரனும் இவனோ........
சொல்லு சொல்லு........ சட்டென சொல்லு......
பாரடி பாரடி பாரடி இவனோ
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ
கூறடி கூறடி யாரடி இவனோ
கெட்டதைப் பட்டென சுட்டிடும் சிவனோ....

ஆண்குழு: ஏ....பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா
மதுரைக்கா..... மெட்ராசுக்கா... திருச்சிக்கா.... திருத்தணிக்கா...
ஏ.....பல்லே லக்கா பல்லே லக்கா...............
ஒட்டு மொத்த மக்களுக்கா.............
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா!

ஆண்: காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும்
மறந்து போகுமா......?
ஓ......தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும்
தொலைந்து போகுமா........?
நம்ம களத்து மேடு.......கம்மாக் கரை கரிசக் காடு.........
செம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு...........
ஏ.......சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி............
படுப்படுப்படுவென போர்த்திய புல்வெளி..............
தொடத் தொடத் தொடத் தொட உடைகிற பனித்துளி.....
சுடச் சுடச் சுட கிடைக்கிற இட்லி
தட தட தடவென அதிர்கிற ரயிலடி.......
கட கட கடவென கடக்கிற காவிரி
விறு விறு விறுயெவன மடிக்கிற வெற்றிலை
முறுமுறுவென முறுக்கிய மீசைகள்
மனதில் இருக்குது மெய் மெய் மெய் மெய் மெய்
மெய் மெய் மெய் மெய் மெய் மெய்.......மெய்.......... (சூரியனோ சந்திரனோ...)

(இசை....)

பெண்: சட்டென சொல்லு....
சட்டென சொல்லு.....
குழு: ஏலே.... லே.. லல்லல் லாலா....

ஆண்: ஏலேலே.......கிராமத்துக் குடிசையிலே கொஞ்சக் காலம்
தங்கிப் பாருலே.......
பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...

ஆண்: கூரையின் ஓட்டை விரிசல் வழி
நட்சத்திரம் எண்ணிப் பாருலே
பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே..

ஆண்: கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அனைத்து
கொஞ்சும் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக் கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்!

பெண்: ஆல மரத்துக்கு ஜடையை
பிண்ணித்தான்
பூக்கள் வைக்கலாமே.......

ஆண்: ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்
பென்சில் சிவலாமே...... (ஏ பல்லே லக்கா...)
(இசை....)

பெண்: சட்டென சொல்லு....

ஆண்: ஏலே.....லே.....அஞ்சறை பெட்டியிலே
ஆத்தோவோட ருசியிருக்கும்......
பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...

ஆண்: அம்மியில் அரைச்சு ஆக்கிவச்ச
நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்.....
பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...

ஆண்: ஏலே..... ஆடு மாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்....
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்....
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்.....
மண்ணு எங்கும் வீசும்.....

பெண்: பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு
பேயும் ஓடிப்போகும்!

ஆண்: பங்காளி... பக்கத்து வீட்டுக்கும்
சேத்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்.... (ஏ பல்லே லக்கா...)

ஆண்: cool...........

pĕṇguḻu: sūriyaṉo.... sandiraṉo....... yārivaṉo...
saṭṭuṉṉu sŏllu......
serappāṇḍi sūraṉum ivaṉo........
sŏllu sŏllu........ saṭṭĕṉa sŏllu......
sūriyaṉo.... sandiraṉo....... yārivaṉo...
saṭṭuṉṉu sŏllu......
serappāṇḍi sūraṉum ivaṉo........
sŏllu sŏllu........ saṭṭĕṉa sŏllu......
pāraḍi pāraḍi pāraḍi ivaṉo
pāygiṟa siṟuttaiyiṉ kālaḍi ivaṉo
kūṟaḍi kūṟaḍi yāraḍi ivaṉo
kĕṭṭadaip paṭṭĕṉa suṭṭiḍum sivaṉo....

āṇguḻu: e....palle lakkā palle lakkā selattukkā
maduraikkā..... mĕṭrāsukkā... tiruccikkā.... tiruttaṇikkā...
e.....palle lakkā palle lakkā...............
ŏṭṭu mŏtta makkaḽukkā.............
aṇṇaṉ vandā tamiḻnāḍu amĕrikkā!

āṇ: kāviri āṟum kai kuttal arisiyum
maṟandu pogumā......?
o......tāvaṇip pĕṇgaḽum tūduviḍum kaṇgaḽum
tŏlaindu pogumā........?
namma kaḽattu meḍu.......kammāk karai karisak kāḍu.........
sĕmmaṇ aḽḽit tĕḽikkum roḍu...........
e.......saḍuguḍu saḍuguḍu saḍuguḍu saḍuguḍu
saḍuguḍu saḍuguḍu saḍuguḍu saḍuguḍu
saḍuguḍu saḍuguḍu āḍiya marattaḍi............
paḍuppaḍuppaḍuvĕṉa porttiya pulvĕḽi..............
tŏḍat tŏḍat tŏḍat tŏḍa uḍaigiṟa paṉittuḽi.....
suḍac cuḍac cuḍa kiḍaikkiṟa iṭli
taḍa taḍa taḍavĕṉa adirgiṟa rayilaḍi.......
kaḍa kaḍa kaḍavĕṉa kaḍakkiṟa kāviri
viṟu viṟu viṟuyĕvaṉa maḍikkiṟa vĕṭrilai
muṟumuṟuvĕṉa muṟukkiya mīsaigaḽ
maṉadil irukkudu mĕy mĕy mĕy mĕy mĕy
mĕy mĕy mĕy mĕy mĕy mĕy.......mĕy.......... (sūriyaṉo sandiraṉo...)

(isai....)

pĕṇ: saṭṭĕṉa sŏllu....
saṭṭĕṉa sŏllu.....
kuḻu: ele.... le.. lallal lālā....

āṇ: elele.......kirāmattuk kuḍisaiyile kŏñjak kālam
taṅgip pārule.......
pĕṇ: ele.... ele.... ele.... le...

āṇ: kūraiyiṉ oṭṭai virisal vaḻi
naṭcattiram ĕṇṇip pārule
pĕṇ: ele.... ele.... ele.... le..

āṇ: kūvum sĕlfoṉiṉ naccarippai aṉaittu
kŏñjum silvaṇḍiṉ uccarippai keṭpom
vĕṟum kālil sĕruppiṇḍri naḍandu
maṇṇoḍu pesik kŏṇḍu povom
maḻalaigaḽ āvom!

pĕṇ: āla marattukku jaḍaiyai
piṇṇittāṉ
pūkkaḽ vaikkalāme.......

āṇ: ūroram ayyaṉāriḍam katti vāṅgittāṉ
pĕṉcil sivalāme...... (e palle lakkā...)
(isai....)

pĕṇ: saṭṭĕṉa sŏllu....

āṇ: ele.....le.....añjaṟai pĕṭṭiyile
āttovoḍa rusiyirukkum......
pĕṇ: ele.... ele.... ele.... le...

āṇ: ammiyil araiccu ākkivacca
nāṭṭukkoḻi paṭṭai kiḽappum.....
pĕṇ: ele.... ele.... ele.... le...

āṇ: ele..... āḍu māḍu mela uḽḽa pāsam
vīṭṭu reṣaṉ kārṭil serkkac cŏlli keṭkum....
vĕṟum taṇṇi keṭṭā moru tarum nesam....
vĕḽḽandi maṉidargaḽ vāsam.....
maṇṇu ĕṅgum vīsum.....

pĕṇ: pāmbaḍak kiḻaviyiṉ paccilai marundukku
peyum oḍippogum!

āṇ: paṅgāḽi... pakkattu vīṭṭukkum
settu samaikkiṟa aṉbu iṅgu vāḻum.... (e palle lakkā...)

āṇ: cool...........