ஹோய்
ஆரீரோ ஆரீரோ
ஆரீரோ ஹோ. ஹோ ..
ஆரீரோ ஆரீரோ
ஆரீரோ ஹோ.. ஹோ .
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடி களைத்ததும் ஆடி களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
பல்லவன் பல்லவை பாடட்டுமே...
ராக பாவங்கள் பாடலில் விளங்க
தாள பாவங்கள் ஆடலில் விளங்க ஹோ.. ஹோ
ராக பாவங்கள் பாடலில் விளங்க
தாள பாவங்கள் ஆடலில் விளங்க
ராஜா சபையினில் மன்னவர் மயங்க
ராஜா சபையினில் மன்னவர் மயங்க
தத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட
தத்தோம் தரிகிட
தக ஜிமி தரிகிட தா
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடி களைத்ததும் ஆடி களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
மின்னல் ஓவியம் இடையினில் தீட்ட
அன்னம் என்பதை நடையினில் காட்ட
காதல் வீணையை கண்களில் மீட்ட
காவியம் ஆயிரம் பிறக்கட்டுமே
பல்லவன் பல்லவி ..