Oru naalukkul ettanai

ஒரு நாளுக்குள் எத்தனை
Year
Language

ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தைத் தொடுகிற உறவு
ஓ ஓ ஓ ஓ...
ஓஹோ ஓ ஓ ஓ ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகின்ற பொழுது
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு
ஓ ஓ ஓ ஓஹோ

பெண்: ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
என்றாலும் கால்கள் மிதக்கும்
ஓஹோ... (ஒரு நாளுக்குள்...)

(இசை...)

ஆண்: நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்
நீ காதலா... இல்லை கடவுளா...
புரியாமல் திணறிப் போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில்.. உன் அருகினில்..
உறங்காமல் உறங்கிப் போவேன்

பெண்: இது ஏதோ புரியா உணர்வு
இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனிமலை... ஒரு எரிமலை...
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்... (ஒரு நாளுக்குள்...)

(இசை...)

ஆண்: நதியாலே பூக்கும் மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா.. கொஞ்சம் புரியுமா..
கரையோட கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
பிறக்காத கனவுகள் பிறக்கும்

பெண்: தன் வாசனை பூ அறியாது
கண்ணாக்கு கண் கிடையாது
அது புரியலாம்... பின்பு தெரியலாம்...
அது வரையில் நடப்பது நடக்கும்....

āṇ: ŏru nāḽukkuḽ ĕttaṉai kaṉavu
uṉ pārvaiyil viḻugiṟa pŏḻudu
tŏḍu vāṉattait tŏḍugiṟa uṟavu
o o o o...
oho o o o ŏru nāḽukkuḽ ĕttaṉai kaṉavu
uṉ pārvaiyil viḻugiṇḍra pŏḻudu
tŏḍu vāṉattait tŏḍugiṇḍra uṇarvu
o o o oho

pĕṇ: ŏru nimiḍattil ĕttaṉai mayakkam
inda mayakkattil ĕttaṉai tayakkam
inda tayakkattilum varum naḍukkam
ĕṇḍrālum kālgaḽ midakkum
oho... (ŏru nāḽukkuḽ...)

(isai...)

āṇ: naḍai uḍaigaḽ pāvaṉai māṭri vaittāy
nāṉ pesiḍa vārttaigaḽ nī kuḍuttāy
nī kādalā... illai kaḍavuḽā...
puriyāmal tiṇaṟip poṉeṉ
yāreṉum aḻaittāl ŏru muṟai tāṉ
nī tāṉo ĕṇḍre tirumbiḍuveṉ
tiṉam iraviṉil.. uṉ arugiṉil..
uṟaṅgāmal uṟaṅgip poveṉ

pĕṇ: idu edo puriyā uṇarvu
idaip purindiḍa muyaṇḍriḍum pŏḻudu
ŏru paṉimalai... ŏru ĕrimalai...
viral korttu ŏṇḍrāy sirikkum... (ŏru nāḽukkuḽ...)

(isai...)

āṇ: nadiyāle pūkkum maraṅgaḽukku
nadi mīdu irukkum kādaliṉai
nadi aṟiyumā.. kŏñjam puriyumā..
karaiyoḍa kaṉavugaḽ ĕllām
uṉakkāga ŏru pĕṇ irundu viṭṭāl
avaḽ kūḍa uṉṉaiyum virumbi viṭṭāl
nī paṟakkalām uṉṉai maṟakkalām
piṟakkāda kaṉavugaḽ piṟakkum

pĕṇ: taṉ vāsaṉai pū aṟiyādu
kaṇṇākku kaṇ kiḍaiyādu
adu puriyalām... piṉbu tĕriyalām...
adu varaiyil naḍappadu naḍakkum....