Or mirugam

ஓர் மிருகம்
Work
Year
Language

யாத்தே கால கூத்தே வாழ்வே பாழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே

ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை, தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

யாத்தே கால கூத்தே வாழ்வே பாழுதாச்சே

தாழ் போன வீடு, கால் போன ஆடு
ஒன்னோட ஒன்னா துணையானதேன்
தாய் போல நெஞ்சு, தாலாத அன்பு
மழை தண்ணியோடு மாசில்லையே

வழி சொல்லவே இல்லையே வாய்மொழி
கண்ணீரு தான் ஏழையின் தான்மொழி
எங்கே தவிக்கும் உன் பிள்ளையே
இங்கே உறவு என் பிள்ளையே

கை கொண்ட நெல்லு உமியாகும் போது
கத்தலை சோறும் சோறாகுமே
உண்டான சொந்தம் உடைகின்ற போது
இல்லாத சொந்தம் உறவாகுமே

ஒரு சீவனோ உறவிலே சேருதே
இரு சீவனோ ஒத்தையில் வாடுதே
கண்ணீர் துடைக்க ஆளில்லையே
காலம் நடக்கும் காலில்லையே
(யாத்தே கால)

ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை, தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

yātte kāla kūtte vāḻve pāḻudācce
eḻai pāḍu pārtte kāḍum aḻudācce

or mirugam or mirugam
taṉṉai, taṉṉaḍimai sĕyvadum illai
or maṉidaṉ or aḍimai ĕṇḍrāl
adu maṉidaṉ sĕyyum velai

yātte kāla kūtte vāḻve pāḻudācce

tāḻ poṉa vīḍu, kāl poṉa āḍu
ŏṉṉoḍa ŏṉṉā tuṇaiyāṉadeṉ
tāy pola nĕñju, tālāda aṉbu
maḻai taṇṇiyoḍu māsillaiye

vaḻi sŏllave illaiye vāymŏḻi
kaṇṇīru tāṉ eḻaiyiṉ tāṉmŏḻi
ĕṅge tavikkum uṉ piḽḽaiye
iṅge uṟavu ĕṉ piḽḽaiye

kai kŏṇḍa nĕllu umiyāgum podu
kattalai soṟum soṟāgume
uṇḍāṉa sŏndam uḍaigiṇḍra podu
illāda sŏndam uṟavāgume

ŏru sīvaṉo uṟavile serude
iru sīvaṉo ŏttaiyil vāḍude
kaṇṇīr tuḍaikka āḽillaiye
kālam naḍakkum kālillaiye
(yātte kāla)

or mirugam or mirugam
taṉṉai, taṉṉaḍimai sĕyvadum illai
or maṉidaṉ or aḍimai ĕṇḍrāl
adu maṉidaṉ sĕyyum velai