Nandri sollave unakku

நன்றி சொல்லவே உனக்கு
Year
Language

சதமானம் பவதி சதாயஷ் குருஸஷ் சதேந்திரிய ஹ
ஆயுஷ்யேந்திரியே ப்ரதி திஷ்டதி.. (இசை)

பெண்: நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண்: நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண்: பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண்: சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

பெண்: நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

***

ஆண்: ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது
பெண்: சுடும் மொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட
ஆண்: போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட
பெண்: பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண்: சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

பெண்: நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே (இசை)

பெண்குழு: சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்

***

ஆண்: வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே
பெண்: திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தானே
ஆண்: நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பெண்: பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண்: சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

பெண்: நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே
ஆண்: நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க
பெண்: பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன்
ஆண்: சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்

பெண்: நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே

sadamāṉam pavadi sadāyaṣ kurusaṣ sadendiriya ha
āyuṣyendiriye pradi tiṣṭadi.. (isai)

pĕṇ: naṇḍri sŏllave uṉakku ĕṉ maṉṉavā vārttaiyillaiye
tĕyvamĕṉbade ĕṉakku nīyallavā veṟu illaiye
āṇ: nāṟpuṟamum alaigaḽ aḍikka nīyŏru tīvĕṉa taṉittirukka
pĕṇ: pūmikkŏru pāram ĕṇḍru ĕṇṇi irundeṉ
pū muḍikka yārumiṇḍri kaṉṉi irundeṉ
āṇ: sŏndamiṇḍri pandamiṇḍri nāṉumirundeṉ
pŏṭṭu ŏṇḍru tŏṭṭu vaittu pūvai aḍaindeṉ

pĕṇ: naṇḍri sŏllave uṉakku ĕṉmaṉṉavā vārttaiyillaiye
tĕyvamĕṉbade ĕṉakku nīyallavā veṟu illaiye

***

āṇ: rāsi illai ivaḽ ĕṉa palar tūṭriya podu
rāppagalāy ĕḻum tuyar uṉṉai vāṭṭiya podu
pĕṇ: suḍum mŏḻi nāḽum keṭṭu iru siṟu viḻi nīril āḍa
or nadi vaḻi oḍum oḍam ĕṉa vidi vaḻi nāṉum oḍa
āṇ: podum podum vāḻkkai ĕṇḍru
eḻai mādu ĕṇṇum podu nāṉum aṇaittiḍa
pĕṇ: pūmikkŏru pāram ĕṇḍru ĕṇṇi irundeṉ
pū muḍikka yārumiṇḍri kaṉṉi irundeṉ
āṇ: sŏndamiṇḍri pandamiṇḍri nāṉumirundeṉ
pŏṭṭu ŏṇḍru tŏṭṭu vaittu pūvai aḍaindeṉ

pĕṇ: naṇḍri sŏllave uṉakku ĕṉ maṉṉavā vārttaiyillaiye
tĕyvamĕṉbade ĕṉakku nīyallavā veṟu illaiye (isai)

pĕṇguḻu: samjim samjim samjim samjim sam jimjimjim jim jim
samjim samjim samjim samjim sam jimjimjim jim jim jim

***

āṇ: vāḻum varai niḻal ĕṉa uḍaṉ nāṉ varuveṉe
eḻbiṟappum uyirduṇai uṉai nāṉ piriyeṉe
pĕṇ: tisaiyaṟiyādu nāṉe iṇḍru tiṉasari vāḍiṉeṉe
inda paṟavaiyiṉ veḍandāṅgal
undaṉ maṉamĕṉṉum vīḍu tāṉe
āṇ: nīṇḍa kālam nernda sogam
nīṅgi poga nāṉum tīṇḍa yogam viḽaindiḍa