Naan erikkarai

நான் ஏரிக்கரை
Year
Language

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே

பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து

பெண்குழு : மாமனுக்கு காத்திருந்தேன் காணலே

பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்

பெண்குழு : வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே (இசை)

பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக‌ போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகள
உள்ளாற பூட்டி வச்சே திண்டாடி
நிக்கிறேனே இக்கரையிலே

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து

ஆண்குழு : ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே

ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்

ஆண்குழு : சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே

***

ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரந்தான்
தாழப் பறந்து வரும் மேகந்தான்
உன்கிட்ட சேராதோ
என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும்
சந்தர்ப்பம் வாராதோ

பெண் : உன் கூட நானும் சேர
ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு
சேதி ஒண்ணு சொன்னேனே

ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது

பெண் : நான் மா மரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே

ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே

***

பெண் : மாமன் நெனப்பில்
சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில்
கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா
மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ

ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி
கன்னிப் பொண்ணா மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி
மையல் தீரபேசாதோ

பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சி
உள்ளார ஏதேதோ ஆயாச்சு

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே

பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும்
அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளார பூட்டிவச்சு
திண்டாடி நிக்கிறேனே
இக்கரையிலே

ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே

பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே

āṇ : nāṉ erikkarai melirundu
ĕṭṭut tisai pārttirundu
endiḻaikkuk kāttirundeṉ kāṇale
maṇi eḻu ĕṭṭu āṉa piṉṉum
ūraḍaṅgi poṉa piṉṉum
soṟu taṇṇi veṇumuṉṉu toṇale
ĕṉ tĕmmāṅgu pāṭṭa keṭṭu
tĕṉkāttu oḍi vandu
tūdāga poga veṇum akkaraiyile
nāṉ uṇḍāṉa āsaigaḽai
uḽḽāṟa pūṭṭi vacce ŏttaiyile
vāḍuṟeṉe ikkaraiyile

pĕṇ : nāṉ māmarattiṉ kīḻirundu
muṉṉum piṉṉum pārttirundu

pĕṇguḻu : māmaṉukku kāttirundeṉ kāṇale

pĕṇ : aḍa sāyaṅgālam āṉa piṉṉum
sandai mūḍi poṉa piṉṉum

pĕṇguḻu : vīḍu poyi serndiḍattāṉ toṇale (isai)

pĕṇ : nāṉ māmarattiṉ kīḻirundu
muṉṉum piṉṉum pārttirundu
māmaṉukku kāttirundeṉ kāṇale
aḍa sāyaṅgālam āṉa piṉṉum
sandai mūḍi poṉa piṉṉum
vīḍu poyi serndiḍattāṉ toṇale
ĕṉ tĕmmāṅgu pāṭṭa keṭṭu
tĕṉkāttu oḍi vandu
tūdāga‌ poga veṇum akkaraiyile
nāṉ uṇḍāṉa āsaigaḽa
uḽḽāṟa pūṭṭi vacce tiṇḍāḍi
nikkiṟeṉe ikkaraiyile

āṇ : nāṉ erikkarai melirundu
ĕṭṭut tisai pārttirundu

āṇguḻu : endiḻaikkuk kāttirundeṉ kāṇale

āṇ : maṇi eḻu ĕṭṭu āṉa piṉṉum
ūraḍaṅgi poṉa piṉṉum

āṇguḻu : soṟu taṇṇi veṇumuṉṉu toṇale

***

āṇ : tūrak kiḻakku karai orandāṉ
tāḻap paṟandu varum megandāṉ
uṉkiṭṭa serādo
ĕṉ pāṭṭa kūṟādo
ŏṇṇāga nām kūḍum
sandarppam vārādo

pĕṇ : uṉ kūḍa nāṉum sera
ŏtta kālil niṉṉeṉe
sĕnnārai kūṭṭattoḍu
sedi ŏṇṇu sŏṉṉeṉe

āṇ : kaṇṇālam kāṭci ĕppodu
ĕnnāḽum ĕṉ nesam tappādu

pĕṇ : nāṉ mā marattiṉ kīḻirundu
muṉṉum piṉṉum pārttirundu
māmaṉukku kāttirundeṉ kāṇale

āṇ : maṇi eḻu ĕṭṭu āṉa piṉṉum
ūraḍaṅgiboṉa piṉṉum
soṟu taṇṇi veṇumiṉṉu toṇale

***

pĕṇ : māmaṉ nĕṉappil
siṉṉat tāyidāṉ
māsak kaṇakkil
kŏṇḍa noyidāṉ
maccāṉ kai paṭṭākkā
mūccūḍum tīrādo
akkāḽiṉ pŏṇṇukkor
pŏṟkālam vārādo

āṇ : kaiyendum āṭṭu kuṭṭi
kaṉṉip pŏṇṇā māṟado
maiyendum kaṇṇai kāṭṭi
maiyal tīrabesādo

pĕṇ : uṉṉāle tūkkam poyācci
uḽḽāra ededo āyāccu

āṇ : nāṉ erikkarai melirundu
ĕṭṭu tisaibārttirundu
endiḻaikku kāttirundeṉ kāṇale
maṇi eḻu ĕṭṭu āṉa piṉṉum
ūraḍaṅgiboṉa piṉṉum
soṟu taṇṇi veṇumiṉṉu toṇale

pĕṇ : ĕṉ tĕmmāṅgu pāṭṭa keṭṭu
tĕṉkāttu oḍivandu
tūdāga poga veṇum
akkaraiyile
nāṉ uṇḍāṉa āsaigaḽai
uḽḽāra pūṭṭivaccu
tiṇḍāḍi nikkiṟeṉe
ikkaraiyile

āṇ : nāṉ erikkarai melirundu
ĕṭṭu tisaibārttirundu
endiḻaikku kāttirundeṉ kāṇale

pĕṇ : aḍa sāyaṅgālam āṉa piṉṉum
sandai mūḍiboṉa piṉṉum
vīḍu poy serndiḍattāṉa toṇale