Mugilo megamo

முகிலோ மேகமோ
Work
Year
Language

முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே
நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே

முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ....

இதயத்தின் அறைகளில் புதிய வாசம்
மனம் எனும் வனங்களில் மலர்ந்த பூவின் நேசம்
நினைவெனும் அலைகளில் வலையாய் வீசும்
விரல்களை இதயமே விரும்பியே சேரும்
காதலின் சேட்டைகள் காரணம் நீயடி
பார்வையின் வேட்டைகள் தைத்ததே வில்லடி
இனிமைகள் எது எது அது நமக்கு நடுவிலே

முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே

கடற்கரை மணலிலே நடந்து போனேன்
சுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன்
கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்
அலை எது கரை எது குளம்பியே போனேன்
சிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே
தவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலயே
அருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயே தான்

முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே
நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே

முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ....

mugilo megamo sŏl veṟu veṟu
iraṇḍum iraṇḍo pŏruḽ ŏṇḍru tāṉe
uḍalāl tegattāl iraṇḍāṉa podilum
uyirāl uṇarviṉāl adu ŏṇḍrudāṉe
nīyo nāṉo iru jīvaṉ ŏṇḍre

mugilo megamo sŏl veṟu veṟu
iraṇḍum iraṇḍo....

idayattiṉ aṟaigaḽil pudiya vāsam
maṉam ĕṉum vaṉaṅgaḽil malarnda pūviṉ nesam
niṉaivĕṉum alaigaḽil valaiyāy vīsum
viralgaḽai idayame virumbiye serum
kādaliṉ seṭṭaigaḽ kāraṇam nīyaḍi
pārvaiyiṉ veṭṭaigaḽ taittade villaḍi
iṉimaigaḽ ĕdu ĕdu adu namakku naḍuvile

mugilo megamo sŏl veṟu veṟu
iraṇḍum iraṇḍo pŏruḽ ŏṇḍru tāṉe

kaḍaṟkarai maṇalile naḍandu poṉeṉ
suvaḍugaḽ aṉaittilum uṉṉai nāṉ pārtteṉ
kalaṅgarai viḽakkamum viḻiyil pārtteṉ
alai ĕdu karai ĕdu kuḽambiye poṉeṉ
siṟagugaḽ virikkiṟeṉ paṟavaiye paṟavaiye
tavaḻgiṟeṉ kudikkiṟeṉ maḻalaiye maḻalaye
arugilum tŏlaivilum nĕrukkam nīye tāṉ

mugilo megamo sŏl veṟu veṟu
iraṇḍum iraṇḍo pŏruḽ ŏṇḍru tāṉe
uḍalāl tegattāl iraṇḍāṉa podilum
uyirāl uṇarviṉāl adu ŏṇḍrudāṉe
nīyo nāṉo iru jīvaṉ ŏṇḍre

mugilo megamo sŏl veṟu veṟu
iraṇḍum iraṇḍo....