Mengo maamiyaa

மேங்கோ மாமியா
Year
Language

ஆண்: மேங்கோ மாமியா காதல் ஒரு தேனீயா
சுனாமி போல தாகம் வந்துருச்சி
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி

பெண்: மேங்கோ மாமியா காதல் ஒரு பேயா
பிசாசுப்போல ஆட்டம் வந்துருச்சி
பாட்டம் வந்துருச்சி நாட்டம் வந்துருச்சி

ஆண்: கண்ணோடு கண்ணு குத்தி நெஞ்சோடு நெஞ்சு சுத்தி
சுருண்டு விழுந்தேனே ஆத்தி

பெண்: மூச்சோடு மூச்சு முட்டி பேச்சோடு பேச்சுக்கட்டி
மிரண்டு விழுந்தேனே ஆத்தி

ஆண்: பளார் பளார் பளார் என
ஆசை வந்து நெஞ்சை அறையுதே (மேங்கோ மாமியா...)

(இசை...)
பெண்: மோத மோத போதைக் கொண்டேன்
சேலைப் போட்டக் காளையானேன்
வந்து நீயும் முட்டிப்பாரடா
தோல்விக்கூட வெற்றி தானடா

ஆண்: கூர்மையான கொம்புக்காரி
கோபமான வம்புக்காரி
உந்தன் மோதல் நோகவில்லையே
உயிர் போயும் சாகவில்லையே

பெண்: சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே (மேங்கோ மாமியா...)

(இசை...)

ஆண்: ஓ ரெண்டு நாக்கு ஒட்ட வேணும்
கட்டில் தேக்கு திட்ட வேணும்
எந்தன் ஆசை நச்சரிக்குதே
திறந்த வானம் எச்சரிக்குதே

பெண்: கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன்
பின்பு நானே ஒத்துழைப்பேன்
நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்ப்படி
என்று நீயும் கண்டதெப்படி

ஆண்: சரா சரி சரா சரி
ஆணும் பெண்ணும் நாம இல்லையே (மேங்கோ மாமியா...)

āṇ: meṅgo māmiyā kādal ŏru teṉīyā
suṉāmi pola tāgam vandurucci
vegam vandurucci mogam vandurucci

pĕṇ: meṅgo māmiyā kādal ŏru peyā
pisāsuppola āṭṭam vandurucci
pāṭṭam vandurucci nāṭṭam vandurucci

āṇ: kaṇṇoḍu kaṇṇu kutti nĕñjoḍu nĕñju sutti
suruṇḍu viḻundeṉe ātti

pĕṇ: mūccoḍu mūccu muṭṭi peccoḍu peccukkaṭṭi
miraṇḍu viḻundeṉe ātti

āṇ: paḽār paḽār paḽār ĕṉa
āsai vandu nĕñjai aṟaiyude (meṅgo māmiyā...)

(isai...)
pĕṇ: moda moda podaik kŏṇḍeṉ
selaip poṭṭak kāḽaiyāṉeṉ
vandu nīyum muṭṭippāraḍā
tolvikkūḍa vĕṭri tāṉaḍā

āṇ: kūrmaiyāṉa kŏmbukkāri
kobamāṉa vambukkāri
undaṉ modal nogavillaiye
uyir poyum sāgavillaiye

pĕṇ: sarā sari sarā sari
āṇum pĕṇṇum nāma illaiye (meṅgo māmiyā...)

(isai...)

āṇ: o rĕṇḍu nākku ŏṭṭa veṇum
kaṭṭil tekku tiṭṭa veṇum
ĕndaṉ āsai naccarikkude
tiṟanda vāṉam ĕccarikkude

pĕṇ: kŏñja neram kŏndaḽippeṉ
piṉbu nāṉe ŏttuḻaippeṉ
nĕñjam āḍum undaṉ sŏṟppaḍi
ĕṇḍru nīyum kaṇḍadĕppaḍi

āṇ: sarā sari sarā sari
āṇum pĕṇṇum nāma illaiye (meṅgo māmiyā...)