Meenammaa adigaalaiyilum

மீனம்மா அதிகாலையிலும்
Work
Year
Language

ஆண் : மீனம்மா...
அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

பெண் : அம்மம்மா முதல் பார்வையிலே
சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே

ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும்
சின்னச் சின்ன மோதல்களும்
மின்னல் போல வந்து வந்து போகும்

பெண் : ஊடல் வந்து ஊடல் வந்து
முட்டிக் கொண்டபோதும்
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்

ஆண் : இரு மாதங்கள் நாட்கள் செல்ல

பெண் : ஆ...

ஆண் : நிறம் மாறிடும் பூக்கள் அல்ல..

பெண் : ஆ...

ஆண் : மீனம்மா...
அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே

***

ஆண் : ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர்
புது வித்தை காட்டிடவா..

பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு எனை எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல்
எனைத் தொட்டுத் தீண்டுவதா

ஆண் : மாமங்காரன் தானே பாயைப் போட்டு தானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய்
தொடலாம்
மீனம்மா...மழை உன்னை நனைக்கும்
இங்கு எனக்கல்லவா குளிர் காய்ச்சல் வரும்

பெண் : அம்மம்மா நீ உன்னை அணைத்தால்
இங்கு எனக்கல்லவா உடல் வேர்த்து விடும் (இசை)

ஆண் : துத் துத் துது... துத்
துதுது..துத் துத் துது... துது

இரு : துத் துத் துது... துத்
துதுது..துத் துத் துது... துது

***

ஆண் : அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது

பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்
நகை நட்டும் பாத்திரமும்
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே
அது கண்ணில் நிற்கிறது

ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு (இசை)

ஆண் : துத் துத் துது... துத்
துதுது..துத் துத் துது... துது

ஆண் : மீனம்மா...
உன்னை நேசிக்கவும் அன்பு வாசிக்கவும்
தென்றல் காத்திருக்கு

பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து
புஷ்பம் பூத்திருக்கு

ஆண் : உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட்டு
என்னென்னவோ சங்கதிகள் சொல்லி விட்டு போக

பெண் : உன் மனமும் என் மனமும் ஒன்றையொன்று
ஏற்றுகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட

ஆண் : இன்று மோகனம் பாட்டெடுத்தோம்

பெண் : ஆ..ஆ...

ஆண் : முழு மூச்சுடன் காதலித்தோம்

பெண் : ஆ..ஆ...

ஆண் : மீனம்மா...
அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே (இசை)

āṇ : mīṉammā...
adigālaiyilum andi mālaiyilum
undaṉ ñābagame

pĕṇ : ammammā mudal pārvaiyile
sŏṉṉa vārttaiyil tāṉ ŏru kāviyame

āṇ : siṉṉac ciṉṉa ūḍalgaḽum
siṉṉac ciṉṉa modalgaḽum
miṉṉal pola vandu vandu pogum

pĕṇ : ūḍal vandu ūḍal vandu
muṭṭik kŏṇḍabodum
iṅgu kādal maṭṭum kāyamiṇḍri vāḻum

āṇ : iru mādaṅgaḽ nāṭkaḽ sĕlla

pĕṇ : ā...

āṇ : niṟam māṟiḍum pūkkaḽ alla..

pĕṇ : ā...

āṇ : mīṉammā...
adigālaiyilum andi mālaiyilum
undaṉ ñābagame

***

āṇ : ŏru siṉṉap pūttiriyil ŏḽi sindum rāttiriyil
inda mĕttai mel iḽam tattaikkor
pudu vittai kāṭṭiḍavā..

pĕṇ : ŏru jaṉṉal aṅgirukku ĕṉai ĕṭṭip pārppadaṟku
adai mūḍāmal tāḻ poḍāmal
ĕṉait tŏṭṭut tīṇḍuvadā

āṇ : māmaṅgāraṉ tāṉe pāyaip poṭṭu tāṉe
mogam tīrave mĕduvāy mĕduvāy
tŏḍalām
mīṉammā...maḻai uṉṉai naṉaikkum
iṅgu ĕṉakkallavā kuḽir kāyscal varum

pĕṇ : ammammā nī uṉṉai aṇaittāl
iṅgu ĕṉakkallavā uḍal verttu viḍum (isai)

āṇ : tut tut tudu... tut
tudutu..tut tut tudu... tudu

iru : tut tut tudu... tut
tudutu..tut tut tudu... tudu

***

āṇ : aṇḍru kādal paṇṇiyadu
undaṉ kaṉṉam kiḽḽiyadu
aḍi ippodum niṟam māṟāmal
inda nĕñjil niṟkiṟadu

pĕṇ : aṅgu paṭṭuc celaigaḽum
nagai naṭṭum pāttiramum
uṉaik keṭṭeṉe saṇḍai poṭṭeṉe
adu kaṇṇil niṟkiṟadu

āṇ : jādimallip pūve taṅga vĕṇṇilāve
āsai tīrave pesalām
mudal nāḽ iravu (isai)

āṇ : tut tut tudu... tut
tudutu..tut tut tudu... tudu

āṇ : mīṉammā...
uṉṉai nesikkavum aṉbu vāsikkavum
tĕṇḍral kāttirukku

pĕṇ : ammammā uṉṉai kādalittu putti pedalittu
puṣpam pūttirukku

āṇ : uṉṉai tŏṭṭa tĕṇḍral vandu ĕṉṉai tŏṭṭu
ĕṉṉĕṉṉavo saṅgadigaḽ sŏlli viṭṭu poga

pĕṇ : uṉ maṉamum ĕṉ maṉamum ŏṇḍraiyŏṇḍru
eṭrugŏṇḍu ŏppandattil kaiyĕḻuttu poḍa

āṇ : iṇḍru mogaṉam pāṭṭĕḍuttom

pĕṇ : ā..ā...

āṇ : muḻu mūccuḍaṉ kādalittom

pĕṇ : ā..ā...

āṇ : mīṉammā...
adigālaiyilum andi mālaiyilum undaṉ ñābagame (isai)