Malargalil aadum

மலர்களில் ஆடும்
Year
Language

மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

பூமரதின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை நெஞ்சுக்குள் தாளாடும்
பால் வடியும் பசுங் கிளிகள் பேசாமல் பேசும் பொன்வண்டோ தேரோடும்
சொர்கத்தின் பக்கத்தை இங்கு நான் காண
என்றென்றும் உன்னோடும் நாளும் நான் ஆட வந்தேனே தோழி நீயம்மா
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்

நான் இன்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம் எண்ணங்கள் போராடும்
நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம் எங்கெங்கும் தேனோடும்
இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட
பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட பெண் மானே நாணம் ஏனம்மா
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
பருவம் சுகமே பூங்காற்றே நீ பாடு
மலர்களில் ஆடும் இளமை புதுமையே
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே ஹோய்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

malargaḽil āḍum iḽamai pudumaiye
maṉadukkuḽ oḍum niṉaivu iṉimaiye hoy
malargaḽil āḍum iḽamai pudumaiye
maṉadukkuḽ oḍum niṉaivu iṉimaiye hoy
paruvam sugame pūṅgāṭre nī pāḍu
malargaḽil āḍum iḽamai pudumaiye
maṉadukkuḽ oḍum niṉaivu iṉimaiye hoy

pūmaradiṉ vāsam vandāl ededo āsai nĕñjukkuḽ tāḽāḍum
pāl vaḍiyum pasuṅ kiḽigaḽ pesāmal pesum pŏṉvaṇḍo teroḍum
sŏrgattiṉ pakkattai iṅgu nāṉ kāṇa
ĕṇḍrĕṇḍrum uṉṉoḍum nāḽum nāṉ āḍa vandeṉe toḻi nīyammā
malargaḽil āḍum iḽamai pudumaiye
maṉadukkuḽ oḍum niṉaivu iṉimaiye hoy

nāṉ iṇḍru keṭpadĕllām kalyāṇa rāgam ĕṇṇaṅgaḽ porāḍum
nāṉ iṇḍru kāṇbadĕllām pŏṉṉāṉa neram ĕṅgĕṅgum teṉoḍum
iṉbattiṉ vaṇṇaṅgaḽ ĕṉṉai sīrāṭṭa
pŏṉvaṇḍiṉ rīṅgāram kŏñjam tālāṭṭa pĕṇ māṉe nāṇam eṉammā
malargaḽil āḍum iḽamai pudumaiye
maṉadukkuḽ oḍum niṉaivu iṉimaiye hoy
paruvam sugame pūṅgāṭre nī pāḍu
malargaḽil āḍum iḽamai pudumaiye
maṉadukkuḽ oḍum niṉaivu iṉimaiye hoy
ā ā ā ā ā ā ā ā ā ā ā ā