Maccaan maccaan

மச்சான் மச்சான்
Year
Language

ஆண்: மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்

பெண்: மச்சான் மச்சான் என் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு என்னை தச்சான்

ஆண்: ஏழேழு ஜென்மந்தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே

பெண்: தாயா நீ சில நேரம்
சேயாய் நீ சில நேரம்
மடிமேல உன்னை சொமப்பேனே
சந்தோஷத்தில் ஒன்னை மறப்பேனே ஓ ஓ

ஆண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
கொன்னுப்புட்ட.. கொன்னுப்புட்ட.. நெஞ்சுக்குள்ள...

பெண்: கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
தந்துபுட்டேன்.. தந்துபுட்டேன்.. என்னை உனக்குதான் (மச்சான் மச்சான்...)

(இசை...)
ஆண்: சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும்
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே

பெண்: என்னை என்ன கேட்டு என்ன சொன்ன என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே

ஆண்: பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப்போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே...

பெண்: உன் பேரைத்தான் சொல்லிதினம் தாவணியப் போட்டேனே
ஆண்: உசுரத்தான் விட்டாக்கூட உன்னைவிட மாட்டேனே
மானே... அடி மானே... ஏ..ஏ.. (கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட...)

(இசை...)

ஆண்: ஆசைவச்ச நெஞ்சு இலவம் பஞ்சுப்போலத் தானே
ஒன்னத்தேடி நாளும் பறக்குமே

பெண்: அம்மிக்கல்லு மேல கால வச்சு மெட்டிப்போடும்
அந்த நாளை மனசும் நெனைக்குமே

ஆண்: கண்ணைமூடிப் பாத்தா எங்கும் நீ தான் வந்து போகிற
உடல் பொருள் ஆவி நீ தானே

பெண்: என்ன வேணும் என்ன வேணும் சொல்லிப்புடு ராசாவே

ஆண்: உன்னப்போலப் பொட்டப்புள்ள பெத்துக்குடு ராசாவே
தேனே.. வந்தேனே... ஏ..ஏ.. (கொன்னுப்புட்ட கொன்னுபுட்ட...)

āṇ: maccāṉ maccāṉ uṉ mela āsai vaccāṉ
vaccu taccāṉ taccāṉ usuroḍu uṉṉai taccāṉ

pĕṇ: maccāṉ maccāṉ ĕṉ mela āsai vaccāṉ
vaccu taccāṉ taccāṉ usuroḍu ĕṉṉai taccāṉ

āṇ: eḻeḻu jĕṉmandāṉ ĕḍuttālum ĕppodum
nĕñjukkuḽḽa ŏṉṉa sŏmappeṉe

pĕṇ: tāyā nī sila neram
seyāy nī sila neram
maḍimela uṉṉai sŏmappeṉe
sandoṣattil ŏṉṉai maṟappeṉe o o

āṇ: kŏṉṉuppuṭṭa... kŏṉṉuppuṭṭa...
kŏṉṉuppuṭṭa.. kŏṉṉuppuṭṭa.. nĕñjukkuḽḽa...

pĕṇ: kŏṉṉuppuṭṭa... kŏṉṉuppuṭṭa...
tandubuṭṭeṉ.. tandubuṭṭeṉ.. ĕṉṉai uṉakkudāṉ (maccāṉ maccāṉ...)

(isai...)
āṇ: sŏlla vanda vārttai sŏṉṉa vārttai sŏllappogum
vārttai yāvum nĕñjil iṉikkude

pĕṇ: ĕṉṉai ĕṉṉa keṭṭu ĕṉṉa sŏṉṉa ĕṉṉa āṉeṉ
inda mayakkam ĕṅgo iḻukkude

āṇ: pĕṇṇe undaṉ kŏlusu ĕndaṉ maṉasa māṭṭippogude
pogum vaḻi ĕṅgum varuveṉe...

pĕṇ: uṉ peraittāṉ sŏllidiṉam tāvaṇiyap poṭṭeṉe
āṇ: usurattāṉ viṭṭākkūḍa uṉṉaiviḍa māṭṭeṉe
māṉe... aḍi māṉe... e..e.. (kŏṉṉuppuṭṭa kŏṉṉubuṭṭa...)

(isai...)

āṇ: āsaivacca nĕñju ilavam pañjuppolat tāṉe
ŏṉṉatteḍi nāḽum paṟakkume

pĕṇ: ammikkallu mela kāla vaccu mĕṭṭippoḍum
anda nāḽai maṉasum nĕṉaikkume

āṇ: kaṇṇaimūḍip pāttā ĕṅgum nī tāṉ vandu pogiṟa
uḍal pŏruḽ āvi nī tāṉe

pĕṇ: ĕṉṉa veṇum ĕṉṉa veṇum sŏllippuḍu rāsāve

āṇ: uṉṉappolap pŏṭṭappuḽḽa pĕttukkuḍu rāsāve
teṉe.. vandeṉe... e..e.. (kŏṉṉuppuṭṭa kŏṉṉubuṭṭa...)