மாயவலையில் வீழ்ந்து மதியை இழந்து
தன்னை மறப்பவர் பெரும் பாவி
மாயாபுரி கோட்டையை கற்கோட்டையாய் எண்ணும்
கயவர்கள் பெரும்பாவி
ஆணாய் பிறந்துலகில் மானாபிமானம் இன்றி
வாழ்பவர் பெரும்பாவி
மண்மேல் வாழ்பவர் பெரும்பாவி
வேதாந்தமே பேசும் வீண் புலமை தன்னை
ஈன்றவர் பெரும் பாவி
ஈன்றவர் பெரும்பாவி