Maayaavi maayaavi

மாயாவி மாயாவி
Work
Year
Language

மாயாவி மாயாவி
தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி
அணிந்தேதான் திரிவான்
தலை தொடும் அலையென எழுந்திடுவான் - நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைத்திடுவான்!

பயம் மூளும் நேரம் தரை வந்து காப்பான்
துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான்
கடமை முடிந்தால் பறந்திடுவான் - பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடிவள் இதயம் தொலையும்! - தனிமைத் தெருவில்
இவளோடவன் நிழலும் அலையும்!

எழுநூறு கோடி முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை எவர் கண்டதுண்டு?
மனதோர் உருவம் வரைகிறதே - காற்றில்
கனவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ? - விழிகள் இருந்தும்
உனை காணவே முடியாததுவோ?

māyāvi māyāvi
tīyāgi varuvāṉ
maṉadoḍum mugamūḍi
aṇindedāṉ tirivāṉ
talai tŏḍum alaiyĕṉa ĕḻundiḍuvāṉ - nĕñjil
aṇaittiḍum maḻaiyĕṉa naṉaittiḍuvāṉ!

payam mūḽum neram tarai vandu kāppāṉ
tuyar kŏṇḍa perai karai kŏṇḍu serppāṉ
kaḍamai muḍindāl paṟandiḍuvāṉ - pāvi
ivaḽiṉ tuyaram maṟandiḍuvāṉ
avaṉoḍivaḽ idayam tŏlaiyum! - taṉimait tĕruvil
ivaḽoḍavaṉ niḻalum alaiyum!

ĕḻunūṟu koḍi mugam iṅgu uṇḍu
aḻagāṉa ŏṇḍrai ĕvar kaṇḍaduṇḍu?
maṉador uruvam varaigiṟade - kāṭril
kaṉavāy aduvum karaigiṟade
kŏḍumai adil kŏḍumai ĕduvo? - viḻigaḽ irundum
uṉai kāṇave muḍiyādaduvo?