Karuvelan kaattukkulla

கருவேலங் காட்டுக்குள்ள
Work
Year
Language

கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்
பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு புரளி பேசுது
சும்மா புரளி பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்
பொரசல் என்ன பொரசலின்னு புரளி பேசுது
சும்மா புரளி பேசுது

ஈசானி மூலையில ஊசி மழை பெய்யயில
குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே
ஈசானி மூலையில ஊசி மழை பெய்யயில
குருவி ரெண்டும் ரெக்கக்குள்ள கூத காயுமே
நாம கூது காய்ஞ்சதுண்டா என்று குத்தி பேசுது
குருவி குத்தி பேசுது
கோடை மழை புடிச்சாலும் அட கூத காத்து அடிச்சாலும்
புடிக்காத குருவிகிட்ட பொட்ட கூடுமா
இது பொம்பளைக்கு புரியலைன்னு புரளி பேசுது
சும்மா புரளி பேசுது
ஆ.. சோடியோடு பாடி ஆட ஓடி ஓடி வந்த போது
சண்ட போட்ட குருவியின்னு சாட பேசுது
கூடு யாரு கூடு என்றும் சோடி எங்கு கூடுமென்றும்
கொஞ்ச நாளில் தெரியுமென்று குருவி பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது

சோலையன் காட்டுக்குள்ள சோளம் கொத்தி திங்கையில
மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே
சோலையன் காட்டுக்குள்ள சோளம் கொத்தி திங்கையில
மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள முத்தம் தருமே
நாம முத்தம் தந்ததுண்டா என்று மொனகி பேசுது
குருவி மொனகி பேசுது
முத்து சோளம் திங்கையிலே அட முத்தம் கித்தம் தந்துக்கிட்டா
சோளத் துண்டு சிக்கிக்கிட்டு தொண்ட விக்குமே ஹ…
இத பொட்டச்சிக்கு சொல்ல சொல்லி குத்தி பேசுது
குருவி குத்தி பேசுது
அஹ… அத்து வன காட்டுக்குள்ள ஒத்த வாயி தண்ணி கேட்டா
முள்ளு காட்டு குருவியின்னு லொள்ளு பேசுது
காடு வெட்டும் சாக்க வச்சு கூடு வெட்ட கூடாதுன்னு
பாடுபட்ட குருவி ஒன்னு பதறி பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள கட்டி வெச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த வேளார் மகனுக்கும்
பொருத்தம் நல்ல பொருத்தமுன்னு புரளி பேசுது
சும்மா புரளி பேசுது
கருவேலங் காட்டுக்குள்ள …

karuvelaṅ kāṭṭukkuḽḽa kaṭṭi vĕcca kūṭṭukkuḽḽa
kāṉāṅguruvi rĕṇḍu ĕṉṉa pesudu aḍa ĕṉṉa pesudu
karuvelaṅ kāṭṭukkuḽḽa kaṭṭi vĕcca kūṭṭukkuḽḽa
kāṉāṅguruvi rĕṇḍu ĕṉṉa pesudu aḍa ĕṉṉa pesudu
muḽḽu vĕṭṭa vanda muttammāḽukkum
vĕṟagu vĕṭṭa vanda veḽār magaṉukkum
pŏruttam nalla pŏruttamuṉṉu puraḽi pesudu
summā puraḽi pesudu
karuvelaṅ kāṭṭukkuḽḽa kaṭṭi vĕcca kūṭṭukkuḽḽa
kāṉāṅguruvi rĕṇḍu ĕṉṉa pesudu aḍa ĕṉṉa pesudu
muḽḽu vĕṭṭa vanda muttammāḽukkum
vĕṟagu vĕṭṭa vanda veḽār magaṉukkum
pŏrasal ĕṉṉa pŏrasaliṉṉu puraḽi pesudu
summā puraḽi pesudu

īsāṉi mūlaiyila ūsi maḻai pĕyyayila
kuruvi rĕṇḍum rĕkkakkuḽḽa kūda kāyume
īsāṉi mūlaiyila ūsi maḻai pĕyyayila
kuruvi rĕṇḍum rĕkkakkuḽḽa kūda kāyume
nāma kūdu kāyñjaduṇḍā ĕṇḍru kutti pesudu
kuruvi kutti pesudu
koḍai maḻai puḍiccālum aḍa kūda kāttu aḍiccālum
puḍikkāda kuruvigiṭṭa pŏṭṭa kūḍumā
idu pŏmbaḽaikku puriyalaiṉṉu puraḽi pesudu
summā puraḽi pesudu
ā.. soḍiyoḍu pāḍi āḍa oḍi oḍi vanda podu
saṇḍa poṭṭa kuruviyiṉṉu sāḍa pesudu
kūḍu yāru kūḍu ĕṇḍrum soḍi ĕṅgu kūḍumĕṇḍrum
kŏñja nāḽil tĕriyumĕṇḍru kuruvi pesudu
karuvelaṅ kāṭṭukkuḽḽa kaṭṭi vĕcca kūṭṭukkuḽḽa
kāṉāṅguruvi rĕṇḍu ĕṉṉa pesudu aḍa ĕṉṉa pesudu

solaiyaṉ kāṭṭukkuḽḽa soḽam kŏtti tiṅgaiyila
mūkkum mūkkum modikkŏḽḽa muttam tarume
solaiyaṉ kāṭṭukkuḽḽa soḽam kŏtti tiṅgaiyila
mūkkum mūkkum modikkŏḽḽa muttam tarume
nāma muttam tandaduṇḍā ĕṇḍru mŏṉagi pesudu
kuruvi mŏṉagi pesudu
muttu soḽam tiṅgaiyile aḍa muttam kittam tandukkiṭṭā
soḽat tuṇḍu sikkikkiṭṭu tŏṇḍa vikkume ha…
ida pŏṭṭaccikku sŏlla sŏlli kutti pesudu
kuruvi kutti pesudu
aha… attu vaṉa kāṭṭukkuḽḽa ŏtta vāyi taṇṇi keṭṭā
muḽḽu kāṭṭu kuruviyiṉṉu lŏḽḽu pesudu
kāḍu vĕṭṭum sākka vaccu kūḍu vĕṭṭa kūḍāduṉṉu
pāḍubaṭṭa kuruvi ŏṉṉu padaṟi pesudu
karuvelaṅ kāṭṭukkuḽḽa kaṭṭi vĕcca kūṭṭukkuḽḽa
kāṉāṅguruvi rĕṇḍu ĕṉṉa pesudu aḍa ĕṉṉa pesudu
muḽḽu vĕṭṭa vanda muttammāḽukkum
vĕṟagu vĕṭṭa vanda veḽār magaṉukkum
pŏruttam nalla pŏruttamuṉṉu puraḽi pesudu
summā puraḽi pesudu
karuvelaṅ kāṭṭukkuḽḽa …