கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா
தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்
செல்ல கிளியே கோபமா
ஏழை மனமே பொல்லாத மனிதர்
இவரை நம்பாதே இவரை நம்பாதே
தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும்
சிலையை மறந்தே ஓடினார்
உன்னை மறவாமலே வந்த துணை நானன்றோ
உன்னை மறவாமலே வந்த துணை நானன்றோ
அ….
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
வண்ணக்கொடியே வண்டாடும் மலரே
எண்ணம் இருந்தும் நாணமா
பாவலர் தமிழின் பண்பான காதல்
மௌன கலையன்றோ
பெண்மை மனது நிலையன்றோ
பாடும் மனதின் பண்பான ஆசை
பார்வை வழியே தோன்றுமே
இனி வரும் நாளெல்லாம் நம் திருநாள் அன்றோ
இனி வரும் நாளெல்லாம் நம் திருநாள் அன்றோ
அ….
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ