Kanda kanavum indru

கண்ட கனவும் இன்று
Year
Language

கண்ட கனவும் இன்று பலித்ததே
என் காதல் செல்வம் கைக்கு வந்ததே

கண்ட கனவும் இன்று பலித்ததே

கொண்ட கொள்கை தான் பரணி பாடுதே 
நான் கொண்ட கொள்கை தான் பரணி பாடுதே 
கொள்ளா ஆனந்த கூத்தாடுதே 
உள்ளம் கொள்ளா ஆனந்த கூத்தாடுதே

கண்ட கனவும் இன்று பலித்ததே

ஆடாதே மயிலே
அன்பனை மயக்க வழி தேடாதே
நீ ஆடாதே மயிலே 

ஆடுவதை எந்தன் காதலன் கண்டால்
ஆடுவதை எந்தன் காதலன் கண்டால்
என் ஆடலை வெறுக்கவும் கூடுமன்றோ

நீ ஆடாதே மயிலே 

பாடும் குயிலே பாடாதே 
என் பாட்டோடு நீ போட்டி போடாதே

பாடும் குயிலே பாடாதே 

நாடிய கண்ணாளன் உன் பாடலை கேட்டால்
நங்கையின் பாடலை வெறுக்கவும் கூடுமன்றோ

பாடும் குயிலே பாடாதே

இந்தாடி நான் ஒரு முத்தம் தந்தேனே
இங்கே இருக்க வேண்டாம் புள்ளி மானே
இந்தாடி நான் ஒரு முத்தம் தந்தேனே 

சிந்தும் அழகோடும் மருளும் விழி கண்டால்
சிந்தும் அழகோடும் மருளும் விழி கண்டால்
வேள்விழியின் அழகை ஒப்புவதுண்டோடி 
என் வேள்விழியின் அழகை ஒப்புவதுண்டோடி 

இந்தாடி நான் ஒரு முத்தம் தந்தேனே

kaṇḍa kaṉavum iṇḍru palittade
ĕṉ kādal sĕlvam kaikku vandade

kaṇḍa kaṉavum iṇḍru palittade

kŏṇḍa kŏḽkai tāṉ paraṇi pāḍude 
nāṉ kŏṇḍa kŏḽkai tāṉ paraṇi pāḍude 
kŏḽḽā āṉanda kūttāḍude 
uḽḽam kŏḽḽā āṉanda kūttāḍude

kaṇḍa kaṉavum iṇḍru palittade

āḍāde mayile
aṉbaṉai mayakka vaḻi teḍāde
nī āḍāde mayile 

āḍuvadai ĕndaṉ kādalaṉ kaṇḍāl
āḍuvadai ĕndaṉ kādalaṉ kaṇḍāl
ĕṉ āḍalai vĕṟukkavum kūḍumaṇḍro

nī āḍāde mayile 

pāḍum kuyile pāḍāde 
ĕṉ pāṭṭoḍu nī poṭṭi poḍāde

pāḍum kuyile pāḍāde 

nāḍiya kaṇṇāḽaṉ uṉ pāḍalai keṭṭāl
naṅgaiyiṉ pāḍalai vĕṟukkavum kūḍumaṇḍro

pāḍum kuyile pāḍāde

indāḍi nāṉ ŏru muttam tandeṉe
iṅge irukka veṇḍām puḽḽi māṉe
indāḍi nāṉ ŏru muttam tandeṉe 

sindum aḻagoḍum maruḽum viḻi kaṇḍāl
sindum aḻagoḍum maruḽum viḻi kaṇḍāl
veḽviḻiyiṉ aḻagai ŏppuvaduṇḍoḍi 
ĕṉ veḽviḻiyiṉ aḻagai ŏppuvaduṇḍoḍi 

indāḍi nāṉ ŏru muttam tandeṉe