Kadal naan taan

கடல் நான் தான்
Year
Language

கடல் நான் தான்
அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது
பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டுத் தான்
கண்ணும் தேடும் உன்னை (2)

வா எந்தன்
இதழாலே காதல் கவிதை தான்
நான் உன் மேல்
எழுதாயோ காலை வரையில் தான்
உன் அங்கம்
முழுதும் உன் பாடல் வரிகள் தான்

உன்னை பார்த்த முதல் தடவை
என் உள்ளக் கதவை நான் திறந்துவிட்டேன்
உடலாவி உனக்கெனவே ஓர் உயில் எழுதி
நான் இறந்துவிட்டேன்
என் தோழா உன் இதழை என் இதழ் மேல்
வைத்தால் நான் உயிர்ப்பேன்
என்னன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால்
நான் மறுபடி மறித்திடுவேன்

தலைவா உன் தலைக்கினி மேல் ஓர்
தலையணையாய் என் தொடை இருக்கும்
மெதுவாய் உன் விழி துயில
என் வளை குலுங்கி மெல் இசைப் படிக்கும்
அங்கங்கே பெண் பறவை தன் சிறகை
உன் மீது விரிக்கும்
அம்மாடி உன் குளிரும் என் குளிரும்
நில்லாமல் நொடியினில் விலகிடுமே

கடல் நான் தான் ....

kaḍal nāṉ tāṉ
alai oyvade illai
suḍar nāṉ tāṉ
talai sāyvade illai
or tuṇai illādadu
pĕṇmai tuyil kŏḽḽādadu
uṇmai tūkkam kĕṭṭut tāṉ
kaṇṇum teḍum uṉṉai (2)

vā ĕndaṉ
idaḻāle kādal kavidai tāṉ
nāṉ uṉ mel
ĕḻudāyo kālai varaiyil tāṉ
uṉ aṅgam
muḻudum uṉ pāḍal varigaḽ tāṉ

uṉṉai pārtta mudal taḍavai
ĕṉ uḽḽak kadavai nāṉ tiṟanduviṭṭeṉ
uḍalāvi uṉakkĕṉave or uyil ĕḻudi
nāṉ iṟanduviṭṭeṉ
ĕṉ toḻā uṉ idaḻai ĕṉ idaḻ mel
vaittāl nāṉ uyirppeṉ
ĕṉṉaṉbe nāṉ taḻuva nī naḻuva viṭṭāl
nāṉ maṟubaḍi maṟittiḍuveṉ

talaivā uṉ talaikkiṉi mel or
talaiyaṇaiyāy ĕṉ tŏḍai irukkum
mĕduvāy uṉ viḻi tuyila
ĕṉ vaḽai kuluṅgi mĕl isaip paḍikkum
aṅgaṅge pĕṇ paṟavai taṉ siṟagai
uṉ mīdu virikkum
ammāḍi uṉ kuḽirum ĕṉ kuḽirum
nillāmal nŏḍiyiṉil vilagiḍume

kaḍal nāṉ tāṉ ....