Kaalangal kanmuṉ

காலங்கள் கண்முன்
Year
Language

காலங்கள்... கண்முன்
பறந்தோடக் காணுகிறேன்
ஆனாலும்... உந்தன்
நெருக்கத்தில் நாணுகிறேன்

நாளும் நாளும் உன் மேல்
எந்தன் காதல் கூடினேன்
நீளும் பாதை எங்கும்
உந்தன் கைகள் நாடினேன்

எங்கும் பூவில் வீதியா?
நீ என் வாழ்வின் மீதியா?

நிலவுகள் நகர்ந்திட
நினைவுகள் வளர்ந்தன அன்பே!
கனவுகள் பகிர்ந்திட
விழிகளும் அறிந்தன அன்பே!

விரிந்ததோ விரிந்ததோ
ஆளுக்கொரு பூச்சிறகு
யுகங்களைக் கடந்திட...

விரல் கோர்த்திடும் பயணங்கள்
எளிதினில் முடிவதில்லை

எங்கும் பூவில் வீதியா?
நீ என் வாழ்வின் மீதியா?

kālaṅgaḽ... kaṇmuṉ
paṟandoḍak kāṇugiṟeṉ
āṉālum... undaṉ
nĕrukkattil nāṇugiṟeṉ

nāḽum nāḽum uṉ mel
ĕndaṉ kādal kūḍiṉeṉ
nīḽum pādai ĕṅgum
undaṉ kaigaḽ nāḍiṉeṉ

ĕṅgum pūvil vīdiyā?
nī ĕṉ vāḻviṉ mīdiyā?

nilavugaḽ nagarndiḍa
niṉaivugaḽ vaḽarndaṉa aṉbe!
kaṉavugaḽ pagirndiḍa
viḻigaḽum aṟindaṉa aṉbe!

virindado virindado
āḽukkŏru pūcciṟagu
yugaṅgaḽaik kaḍandiḍa...

viral korttiḍum payaṇaṅgaḽ
ĕḽidiṉil muḍivadillai

ĕṅgum pūvil vīdiyā?
nī ĕṉ vāḻviṉ mīdiyā?