Kaadal vennilaa

காதல் வெண்ணிலா
Year
Language

காதல் வெண்ணிலா கையில் சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன்

வானத்து நிலவாய் நீ இருந்தால் உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்
தீபத்தை போலே நீ இருந்தால் உனக்கு பதில் நான் உருகிடுவேன்

பூ வனம் போலே நீ இருந்தால் பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

ஓவியம் போல் உன்னை வரைந்திடவே உதிரம் கொண்டு நிறமெடுப்பேன்
சிலையென உன்னை செதுக்கிடவே இமைகள் என்னும் உளியெடுப்பேன்

கவிதையைப் போல் உன்னை எழுதிடவே உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே

kādal vĕṇṇilā kaiyil serumā
sŏllu pūṅgāṭre nī sŏllu pūṅgāṭre

imaiyāga nāṉum iruppeṉ imaikkāmal pārttu rasippeṉ
pala jĕṉmam nāṉ ĕḍuppeṉ uṉakkāga kāttiruppeṉ

vāṉattu nilavāy nī irundāl uṉakku padil nāṉ teyndiḍuveṉ
tībattai pole nī irundāl uṉakku padil nāṉ urugiḍuveṉ

pū vaṉam pole nī irundāl pūvukku padil nāṉ udirndiḍuveṉ
sŏllu pūṅgāṭre nī sŏllu pūṅgāṭre

oviyam pol uṉṉai varaindiḍave udiram kŏṇḍu niṟamĕḍuppeṉ
silaiyĕṉa uṉṉai sĕdukkiḍave imaigaḽ ĕṉṉum uḽiyĕḍuppeṉ

kavidaiyaip pol uṉṉai ĕḻudiḍave uyirukkuḽ irundu sŏl ĕḍuppeṉ sŏllu pūṅgāṭre nī sŏllu pūṅgāṭre