Kaadal rojaave

காதல் ரோஜாவே
Work
Year
Language

ஆண் : காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

ஆண் : கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (இசை)

பெண்குழு : ல..ல ல...லலலா...ல..ல ல...லலலா..
ல..ல ல...லலலா..லல லல லல லலலா....

***

ஆண் : தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

ஆண் : வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

ஆண் : காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

பெண்குழு : ஆ...ஆ...ஆ...ஆ....ஆ.....ஆ...ஆ....

***

ஆண் : வீசுகின்ற தென்றலே
வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ

ஆண் : பாவையில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

ஆண் : காதல் ரோஜாவே , எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

āṇ : kādal rojāve ĕṅge nīĕṅge
kaṇṇīr vaḻiyudaḍi kaṇṇe
kādal rojāve , ĕṅge nīĕṅge
kaṇṇīr vaḻiyudaḍi kaṇṇe

āṇ : kaṇṇukkuḽ nī tāṉ, kaṇṇīril nī tāṉ
kaṇ mūḍi pārttāl nĕñjukkuḽ nīdāṉ
ĕṉṉāṉado edāṉado sŏl sŏl
kādal rojāve , ĕṅge nī ĕṅge
kaṇṇīr vaḻiyudaḍi kaṇṇe (isai)

pĕṇguḻu : la..la la...lalalā...la..la la...lalalā..
la..la la...lalalā..lala lala lala lalalā....

***

āṇ : tĕṇḍral ĕṉṉai tīṇḍiṉāl
selai tīṇḍum ñābagam
siṉṉa pūkkaḽ pārkkaiyil
tegam pārtta ñābagam
vĕḽḽi oḍai pesiṉāl
sŏṉṉa vārttai ñābagam
megam rĕṇḍu sergaiyil
mogam kŏṇḍa ñābagam

āṇ : vāyillāmal poṉāl vārttaiyillai pĕṇṇe
nīyillāmal poṉāl vāḻkkaiyillai kaṇṇe
muḽḽoḍu tāṉ muttaṅgaḽā sŏl sŏl

āṇ : kādal rojāve , ĕṅge nī ĕṅge
kaṇṇīr vaḻiyudaḍi kaṇṇe
kaṇṇukkuḽ nī tāṉ, kaṇṇīril nī tāṉ
kaṇ mūḍi pārttāl nĕñjukkuḽ nīdāṉ
ĕṉṉāṉado edāṉado sŏl sŏl

pĕṇguḻu : ā...ā...ā...ā....ā.....ā...ā....

***

āṇ : vīsugiṇḍra tĕṇḍrale
velaiyillai niṇḍru po
pesugiṇḍra vĕṇṇilā
pĕṇmaiyillai oyndu po
pū vaḽartta toṭṭame
kūndalillai tīrndu po
pūmi pārkkum vāṉame
puḽḽiyāga teyndu po

āṇ : pāvaiyillai pāvai ,tevaiyĕṉṉa tevai
jīvaṉ poṉa piṉṉe sevai ĕṉṉa sevai
muḽḽoḍu tāṉ muttaṅgaḽā sŏl sŏl

āṇ : kādal rojāve , ĕṅge nī ĕṅge
kaṇṇīr vaḻiyudaḍi kaṇṇe
kaṇṇukkuḽ nī tāṉ, kaṇṇīril nī tāṉ
kaṇ mūḍi pārttāl nĕñjukkuḽ nīdāṉ
ĕṉṉāṉado edāṉado sŏl sŏl