Anyajal pettiyaik

அஞ்சல் பெட்டியைக்
Work
Year
Language

அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே கண்கள் சிரிப்பதேன்
என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி ரெக்கை விரிப்பதேன்
துள்ளித்திரிந்த எந்தன் நாட்கள் தயங்கி நடப்பதேன்
என் தோளுக்குமேலே தூரிகை தீண்டும் உணர்வு முளைப்பதேன்
இராட்டிணங்கள் மூளைக்குள்ளே சுற்றிச்சுழல்வதேன்
என் நாடித்துடிப்பு நூறு மடங்காய் நொடியும் உயர்வதேன்
பம்பரங்கள் காலில் சுழலும் பரபரப்பு ஏன்
என் அங்கம் எங்கும் புதுப்புது மின்னல் உருவெடுப்பதேன்
அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே கண்கள் சிரிப்பதேன்
என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி ரத்த ரத்தரா

ஊஞ்சலாடும் மனமே உனக்கு என் நடந்தது
நான் ஓய்வில்லாமல் தத்தித்தாவ உலகம் மறந்தது
உச்சந்தலையை வானவில்லும் துவட்டுகின்றது
என் உள்ளங்கையில் ரேகை பூவாய் மலருகின்றது
உள்ளத்துணையை சுவாசக்காற்று சலவைசெய்தது
நான் ஒவ்வொரு நொடியும் பிறப்பது போல கவிதை சொன்னது
கனவில் மிதந்து நடனம் ஆட கால் நினைத்தது
நான் கரையக் கரைய மேலேப் போக வால் முளைத்தது
என்னை நானே ரசித்துக்கொள்ளும் நிலைமையானது
இது நித்தம் நிகழும் ஆனால் கூட புதுமையானது

añjal pĕṭṭiyaik kaṇḍadume kaṇgaḽ sirippadeṉ
ĕṉ nĕñjukkuḽḽep paṭṭām pūcci rĕkkai virippadeṉ
tuḽḽittirinda ĕndaṉ nāṭkaḽ tayaṅgi naḍappadeṉ
ĕṉ toḽukkumele tūrigai tīṇḍum uṇarvu muḽaippadeṉ
irāṭṭiṇaṅgaḽ mūḽaikkuḽḽe suṭriccuḻalvadeṉ
ĕṉ nāḍittuḍippu nūṟu maḍaṅgāy nŏḍiyum uyarvadeṉ
pambaraṅgaḽ kālil suḻalum parabarappu eṉ
ĕṉ aṅgam ĕṅgum puduppudu miṉṉal uruvĕḍuppadeṉ
añjal pĕṭṭiyaik kaṇḍadume kaṇgaḽ sirippadeṉ
ĕṉ nĕñjukkuḽḽep paṭṭām pūcci ratta rattarā

ūñjalāḍum maṉame uṉakku ĕṉ naḍandadu
nāṉ oyvillāmal tattittāva ulagam maṟandadu
uccandalaiyai vāṉavillum tuvaṭṭugiṇḍradu
ĕṉ uḽḽaṅgaiyil regai pūvāy malarugiṇḍradu
uḽḽattuṇaiyai suvāsakkāṭru salavaisĕydadu
nāṉ ŏvvŏru nŏḍiyum piṟappadu pola kavidai sŏṉṉadu
kaṉavil midandu naḍaṉam āḍa kāl niṉaittadu
nāṉ karaiyak karaiya melep poga vāl muḽaittadu
ĕṉṉai nāṉe rasittukkŏḽḽum nilaimaiyāṉadu
idu nittam nigaḻum āṉāl kūḍa pudumaiyāṉadu