Alai paayum nenyajile

அலை பாயும் நெஞ்சிலே
Year
Language

அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி

அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம் 
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும் 
நட்பிலே காதல் தோன்றினால் யோகம் 
எங்கே எங்கே எங்கே

அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம் 
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும் 
நட்பிலே காதல் தோன்றினால் யோகம் 
எங்கே எங்கே எங்கே

நீ சொல்லாத போதும் உன்னைக் கையோடு தாங்க
ஒரு நட்பில்லையேல் நலம் உன்னோடு சேராதே 
யார் சொன்னாலும் கூட நிழல் மூழ்காது நீரில் 
அதைப் போல் இங்கு காதல் 
உயிர் போனாலும் போகாதே
தொடங்கிய அறிமுகம் தொடர்கிறதே
சிறு குமிழ் இது கடலென விரிகிறதே
ஹே தயங்கிய இடைவெளி குறைகிறதே 
அதனாலே நட்பிலே காதல் ஒன்றே ஒன்றே ஒன்றே 

நீ முள் மீது தூங்க உன்னை முந்தானைப் பாயில் 
படை என்கின்றதே அதன் பேர் இங்கு காதல் தான் 
நீ தன்னாலே ஏங்க உன்னைத் தன்னோடு சேர்த்து 
பயன் செய்கின்றதே அதன் ஆரம்பம் காமம் தான் 
அடி முதல் முடி வரை அரும்பெழுதேன் 
விரல் தொடுவதும் சரியென குழம்பிடுதே 
ரகசிய மொழிகளும் புரிந்திடுதே
உடல் முழுவதும் வியர்வையில் வழிந்திடுதே 
அதனாலே காதலில் காமம் உண்டு உண்டு உண்டு 

அலைபாயும் நெஞ்சிலே ....

alai pāyum nĕñjile koḍi āsaigaḽ macci macci
adaik kūṟave vārttai edu macci

alai pāyum nĕñjile koḍi āsaigaḽ macci macci
adaik kūṟave vārttai edu macci
naṭpile kādal toṇḍriṉāl yogam 
kādalaic cerndāl kūḍume yāvum 
naṭpile kādal toṇḍriṉāl yogam 
ĕṅge ĕṅge ĕṅge

alai pāyum nĕñjile koḍi āsaigaḽ macci macci
adaik kūṟave vārttai edu macci
naṭpile kādal toṇḍriṉāl yogam 
kādalaic cerndāl kūḍume yāvum 
naṭpile kādal toṇḍriṉāl yogam 
ĕṅge ĕṅge ĕṅge

nī sŏllāda podum uṉṉaik kaiyoḍu tāṅga
ŏru naṭpillaiyel nalam uṉṉoḍu serāde 
yār sŏṉṉālum kūḍa niḻal mūḻgādu nīril 
adaip pol iṅgu kādal 
uyir poṉālum pogāde
tŏḍaṅgiya aṟimugam tŏḍargiṟade
siṟu kumiḻ idu kaḍalĕṉa virigiṟade
he tayaṅgiya iḍaivĕḽi kuṟaigiṟade 
adaṉāle naṭpile kādal ŏṇḍre ŏṇḍre ŏṇḍre 

nī muḽ mīdu tūṅga uṉṉai mundāṉaip pāyil 
paḍai ĕṉkiṇḍrade adaṉ per iṅgu kādal tāṉ 
nī taṉṉāle eṅga uṉṉait taṉṉoḍu serttu 
payaṉ sĕygiṇḍrade adaṉ ārambam kāmam tāṉ 
aḍi mudal muḍi varai arumbĕḻudeṉ 
viral tŏḍuvadum sariyĕṉa kuḻambiḍude 
ragasiya mŏḻigaḽum purindiḍude
uḍal muḻuvadum viyarvaiyil vaḻindiḍude 
adaṉāle kādalil kāmam uṇḍu uṇḍu uṇḍu 

alaibāyum nĕñjile ....