Adi leelaa kirusnaa

அடி லீலா கிருஷ்ணா
Year
Language

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா 

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
ஒரு நாளா பொழுதா ராஜா வந்தா
போவது எங்கம்மா
ஒரு நாளா பொழுதா ராஜா வந்தா
போவது எங்கம்மா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா

பூவார் குழலி என்னிடம் வந்தால்
பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை கலையில்
புது வேதம் படிப்பேன்

பூவார் குழலி என்னிடம் வந்தால்
பொன்னாரம் கொடுப்பேன்
பூஜை அறையில் ஆசை கலையில்
புது வேதம் படிப்பேன்
ஏனடி அழகுப் பெண்ணே
பாராடி அபலைப் பெண்ணே
கையில் இல்லாத குற்றம் தானே
கேட்டாய் பொன்னை

அடி ரங்கன் சிங்கன் சுப்பன் வரிசையில் 
என்னையும் சேர்த்தாயோ
நான் நாளது வரையில் ராதா கிருஷ்ணன்
சொன்னேன் கேட்டாயோ

பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா

ஒவ்வொரு பூவில் ஒவ்வொரு வாசம்
ஆளைத் தேடுதடி
ஒயிலாம் நடையும் முகிலாம் ஜடையும்
ஊஞ்சல் போடுதடி
நீ ஒரு பருவச் சோலை
நான் ஒரு இளமைக் காளை
வாழ்வில் தினமும் ஒன்றாய் தேடிக் கொண்டால்
ஏனடி பூ மாலை

அடி ஒரு நாள் ராணி அருகே வாடி
காலம் போகுதடி
இது ஓடை நீரில் ஆடிட வேண்டும்
கோடை காலமடி

பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா
பாடும் புல் புல் பாவைகளா
இது தான் உங்கள் தேவைகளா

அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா
அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி
ஜிகினா ரங்கம்மா...

aḍi līlā kiruṣṇā rādā ramaṇi
jigiṉā raṅgammā 

aḍi līlā kiruṣṇā rādā ramaṇi
jigiṉā raṅgammā
ŏru nāḽā pŏḻudā rājā vandā
povadu ĕṅgammā
ŏru nāḽā pŏḻudā rājā vandā
povadu ĕṅgammā
pāḍum pul pul pāvaigaḽā
idu tāṉ uṅgaḽ tevaigaḽā
pāḍum pul pul pāvaigaḽā
idu tāṉ uṅgaḽ tevaigaḽā

aḍi līlā kiruṣṇā rādā ramaṇi
jigiṉā raṅgammā
aḍi līlā kiruṣṇā rādā ramaṇi
jigiṉā raṅgammā

pūvār kuḻali ĕṉṉiḍam vandāl
pŏṉṉāram kŏḍuppeṉ
pūjai aṟaiyil āsai kalaiyil
pudu vedam paḍippeṉ

pūvār kuḻali ĕṉṉiḍam vandāl
pŏṉṉāram kŏḍuppeṉ
pūjai aṟaiyil āsai kalaiyil
pudu vedam paḍippeṉ
eṉaḍi aḻagup pĕṇṇe
pārāḍi abalaip pĕṇṇe
kaiyil illāda kuṭram tāṉe
keṭṭāy pŏṉṉai

aḍi raṅgaṉ siṅgaṉ suppaṉ varisaiyil 
ĕṉṉaiyum serttāyo
nāṉ nāḽadu varaiyil rādā kiruṣṇaṉ
sŏṉṉeṉ keṭṭāyo

pāḍum pul pul pāvaigaḽā
idu tāṉ uṅgaḽ tevaigaḽā
pāḍum pul pul pāvaigaḽā
idu tāṉ uṅgaḽ tevaigaḽā

aḍi līlā kiruṣṇā rādā ramaṇi
jigiṉā raṅgammā

ŏvvŏru pūvil ŏvvŏru vāsam
āḽait teḍudaḍi
ŏyilām naḍaiyum mugilām jaḍaiyum
ūñjal poḍudaḍi
nī ŏru paruvac colai
nāṉ ŏru iḽamaik kāḽai
vāḻvil tiṉamum ŏṇḍrāy teḍik kŏṇḍāl
eṉaḍi pū mālai

aḍi ŏru nāḽ rāṇi aruge vāḍi
kālam pogudaḍi
idu oḍai nīril āḍiḍa veṇḍum
koḍai kālamaḍi

pāḍum pul pul pāvaigaḽā
idu tāṉ uṅgaḽ tevaigaḽā
pāḍum pul pul pāvaigaḽā
idu tāṉ uṅgaḽ tevaigaḽā

aḍi līlā kiruṣṇā rādā ramaṇi
jigiṉā raṅgammā
aḍi līlā kiruṣṇā rādā ramaṇi
jigiṉā raṅgammā...