Aattangarai orattil

ஆத்தங்கரை ஓரத்தில்
Work
Year
Language

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

காத்தடிக்கும் தெசையில என் மனச
கழுத்த கட்டி இழுக்குது செல
ஆப்பத்துக்கு பாயா கரிபோல
ஆரயும் முழுங்குற ஆள
தூக்கத்தில் சிரிக்கிறேன் கண்ணாலே
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
தூக்கத்தில் சிரிக்கிறேன் கண்ணாலே
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே

ஒரு கரப்பான்பூச்சி போலே என்ன கவுத்துபுட்டாளே
மோசமா கடிக்குற கண்ணாலே
பேசவே முடியல என்னாலே
அட இன்னொரு தடவ இதயம் சுளுக்க
இடுப்ப ஆட்டுதே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

பெண்ணே மாமா கிட்ட மோது
நீ நடக்குற நடை உடை
ஐயோ என் மனசுல ஏதோ தடை
நா என்ன தெருல சுத்தும் நாயா
இரவும் பகலும் என்ன கல் அடிச்சு தொறத்துற
உங்க அப்பன் கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற
நல்லவ போல நடிச்சு ஏமாத்துற
உன்ன பாக்கதான் பாக்கதான் நானும் வந்துருக்கேன் வந்துருக்கேன் ஒரு முறை
காதல சொல்லு
உன்ன பாக்கதான் பாக்கதான் நானும் வந்துருக்கேன் வந்துருக்கேன் ஒரு முறை
காதல சொல்லு

வாய் பேசும்போது கிளியே
நீ பேசும் ஒவிய சிலயோ 
அந்த வெண்ணிலாக்குள்ள ஆயா சுட்ட வடகறி நீதானா
நீ போனா யாரடி எனக்கு
நீதானே ஜின் ஜினா ஜினுக்கு
அடி அஞ்சர மணிக்கே ஜிஞ்செர் சோடா தரவா நான் உனக்கு
நான் பார்த்த ஒருத்தல நீதானே
உன்னாலே தரதல நாந்தானே
அட நெருப்பால விழுந்த
ரேசன் அருசி புழுவென ஆனேனே
மங்காத்தா ராணிய பார்த்தேனே
கைமாத்தா காதல கேட்டேனே
இந்த கோமளவள்ளி என்ன தொட்டா
குளிக்கவே மாட்டேனே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

காலாலே அடுத்த கொலுசு
ஏலேலோ படுது மனசு
ஒரு இரும்ப தொட்ட காந்தம் போல
இழுக்குது அவ வயசு
ராசாத்தி என்னுடன் வறியா
ஏமாத்தி போவது சரியா
என்ன சாவ்கார்பேட்ட பீடா போல
மெல்லுற அரைகொறையா

மன்னாதி மன்னனா இருந்தேனே
உன்னால தெருவுல பொறந்தேனே
என் வாடக சைக்கிளில் ஒருமுறை வந்தா
வானத்தில் பறப்பேனே
கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே
கண்ணாடி வளையலாய் சிணுங்காதே
உன்ன நம்பியே வந்த
என்னையே இப்ப நம்பியார் ஆக்காதே

ஆத்தங்கர…
கம்மாக்கர…
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

āttaṅgarai orattil niṉṉāle
kuyil kūvum kuruviyum pola
akkam pakkam yārukkum tĕriyāma
lukku viṭṭā pakkuṉu mela

kāttaḍikkum tĕsaiyila ĕṉ maṉasa
kaḻutta kaṭṭi iḻukkudu sĕla
āppattukku pāyā karibola
ārayum muḻuṅguṟa āḽa
tūkkattil sirikkiṟeṉ kaṇṇāle
ekkattil tavikkiṟeṉ pŏṇṇāle
tūkkattil sirikkiṟeṉ kaṇṇāle
ekkattil tavikkiṟeṉ pŏṇṇāle

ŏru karappāṉbūcci pole ĕṉṉa kavuttubuṭṭāḽe
mosamā kaḍikkuṟa kaṇṇāle
pesave muḍiyala ĕṉṉāle
aḍa iṉṉŏru taḍava idayam suḽukka
iḍuppa āṭṭude

āttaṅgarai orattil niṉṉāle
kuyil kūvum kuruviyum pola
akkam pakkam yārukkum tĕriyāma
lukku viṭṭā pakkuṉu mela

pĕṇṇe māmā kiṭṭa modu
nī naḍakkuṟa naḍai uḍai
aiyo ĕṉ maṉasula edo taḍai
nā ĕṉṉa tĕrula suttum nāyā
iravum pagalum ĕṉṉa kal aḍiccu tŏṟattuṟa
uṅga appaṉ kiṭṭa ĕṉṉa aḍi vāṅga vaikkiṟa
nallava pola naḍiccu emāttuṟa
uṉṉa pākkadāṉ pākkadāṉ nāṉum vandurukkeṉ vandurukkeṉ ŏru muṟai
kādala sŏllu
uṉṉa pākkadāṉ pākkadāṉ nāṉum vandurukkeṉ vandurukkeṉ ŏru muṟai
kādala sŏllu

vāy pesumbodu kiḽiye
nī pesum ŏviya silayo 
anda vĕṇṇilākkuḽḽa āyā suṭṭa vaḍagaṟi nīdāṉā
nī poṉā yāraḍi ĕṉakku
nīdāṉe jiṉ jiṉā jiṉukku
aḍi añjara maṇikke jiñjĕr soḍā taravā nāṉ uṉakku
nāṉ pārtta ŏruttala nīdāṉe
uṉṉāle taradala nāndāṉe
aḍa nĕruppāla viḻunda
resaṉ arusi puḻuvĕṉa āṉeṉe
maṅgāttā rāṇiya pārtteṉe
kaimāttā kādala keṭṭeṉe
inda komaḽavaḽḽi ĕṉṉa tŏṭṭā
kuḽikkave māṭṭeṉe

āttaṅgarai orattil niṉṉāle
kuyil kūvum kuruviyum pola
akkam pakkam yārukkum tĕriyāma
lukku viṭṭā pakkuṉu mela

kālāle aḍutta kŏlusu
elelo paḍudu maṉasu
ŏru irumba tŏṭṭa kāndam pola
iḻukkudu ava vayasu
rāsātti ĕṉṉuḍaṉ vaṟiyā
emātti povadu sariyā
ĕṉṉa sāvkārbeṭṭa pīḍā pola
mĕlluṟa araigŏṟaiyā

maṉṉādi maṉṉaṉā irundeṉe
uṉṉāla tĕruvula pŏṟandeṉe
ĕṉ vāḍaga saikkiḽil ŏrumuṟai vandā
vāṉattil paṟappeṉe
kaṇṇāle kaṉṉattil aḍikkāde
kaṇṇāḍi vaḽaiyalāy siṇuṅgāde
uṉṉa nambiye vanda
ĕṉṉaiye ippa nambiyār ākkāde

āttaṅgara…
kammākkara…
āttaṅgarai orattil niṉṉāle
kuyil kūvum kuruviyum pola
akkam pakkam yārukkum tĕriyāma
lukku viṭṭā pakkuṉu mela