Aagaayam pookkal virka

ஆகாயம் பூக்கள் விற்க
Year
Language

ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம்பேசி நிற்குதடி மேகம்
(ஆகாயம்..)

ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்
சுவாசிக்கும் கார்காலம்
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு
கை கோர்த்து கல்யாணம்
குட்டை வால் ஓனான் வேலிக்குள்
குதித்தாடும் உற்சாகம்
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்
(ஆகாயம்..)

சோளக்கதிர் முற்றும் பருவத்தில்
கிளி மூக்கில் சந்தோஷம்
சூரியனின் ரேகை மோதாமல்
சொட்டும் பனி சங்கீதம்
(சோலைக்கதிர்..)
கொப்பளத்த நீரை யானைகள்
துப்புவதில் குற்றாலம்
குட்டி கங்கை ஒவ்வொரு புள்ளிளும்
கூடி ஏறும் விடியற் காலம்

குறவை மீன் தாவி துள்ளுவதே
கூழாங்கல் மென்மையில்லையடி
குன்று மேல் வானை பூச்சியொரே
குடை செய்ய ஆசையுள்ளதடி
வானம் மழை தூவும் பருவத்தில்
வருடும் புது மண் வாசம்
வாய்கால் வழியோடும் தண்ணீரில்
கப்பல் விட உத்தேசம்
(ஆகாயம்..)

ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே
அமரும் ஒரு மீன்கொத்தி
அரை பவுனில் செய்து தருவோமா
அதற்கும் ஒரு மூக்குத்தி
(ஆற்றங்கரை..)
அதிகாலை சூரியன் வானத்தில்
மணி பார்க்கும் கடிகாரம்
அலங்காரம் செய்கிற வானம்
ஏழு வண்ண உதட்டு சாயம்
வல்லாரை லேகியம் இல்லாமல்
வானவில் ஞாபகம் தோன்றுதடி
கல்லூரி சென்று படிக்காமல்
கண்ணாலே வைத்தியம் பார்க்குதடி
நதியோர ஈச்சங்கீற்றின்
நாக்கு ரொம்ப நீளும்
நான் அங்கே வளைந்ததென்று
நக்கை பண்ணி பேசும்
(ஆகாயம்..)
(ஒற்றை செடி..)

āgāyam pūkkaḽ viṟka ārambikkum neram
aṅgaṅge perambesi niṟkudaḍi megam
(āgāyam..)

ŏṭrai sĕḍi mugiliṉ muttattil
suvāsikkum kārgālam
mūṅgil kaḽḽi paccai pāmboḍu
kai korttu kalyāṇam
kuṭṭai vāl oṉāṉ velikkuḽ
kudittāḍum uṟcāgam
kŏṭṭi vaitta pūvai nĕñjil
kŏṇḍu vandu serkkum jālam
(āgāyam..)

soḽakkadir muṭrum paruvattil
kiḽi mūkkil sandoṣam
sūriyaṉiṉ regai modāmal
sŏṭṭum paṉi saṅgīdam
(solaikkadir..)
kŏppaḽatta nīrai yāṉaigaḽ
tuppuvadil kuṭrālam
kuṭṭi kaṅgai ŏvvŏru puḽḽiḽum
kūḍi eṟum viḍiyaṟ kālam

kuṟavai mīṉ tāvi tuḽḽuvade
kūḻāṅgal mĕṉmaiyillaiyaḍi
kuṇḍru mel vāṉai pūcciyŏre
kuḍai sĕyya āsaiyuḽḽadaḍi
vāṉam maḻai tūvum paruvattil
varuḍum pudu maṇ vāsam
vāygāl vaḻiyoḍum taṇṇīril
kappal viḍa uttesam
(āgāyam..)

āṭraṅgarai marattiṉ kiḽai mele
amarum ŏru mīṉkŏtti
arai pavuṉil sĕydu taruvomā
adaṟkum ŏru mūkkutti
(āṭraṅgarai..)
adigālai sūriyaṉ vāṉattil
maṇi pārkkum kaḍigāram
alaṅgāram sĕygiṟa vāṉam
eḻu vaṇṇa udaṭṭu sāyam
vallārai legiyam illāmal
vāṉavil ñābagam toṇḍrudaḍi
kallūri sĕṇḍru paḍikkāmal
kaṇṇāle vaittiyam pārkkudaḍi
nadiyora īccaṅgīṭriṉ
nākku rŏmba nīḽum
nāṉ aṅge vaḽaindadĕṇḍru
nakkai paṇṇi pesum
(āgāyam..)
(ŏṭrai sĕḍi..)